முதலில் கிரிக்கெட் இப்போ அரசியல் - ஆடுகளத்தை மாற்றி களமிறங்கிய அம்பதி ராயுடு – அடுத்து தேர்தல் பிரச்சாரம்!

இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

After Retired from CSK Ambati Rayu Join Jagan Mohan Reddy's YSR Congress Party rsk

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் ஆந்திராவைச் சேர்ந்த அம்பதி ராயுடு. ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர் அம்பதி ராயுடு. அதன் பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

பெர்ரி, மெக்ராத் அதிராடியால் ஆஸி, மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ஆரம்பத்தில் ரூ.2.20 கோடிக்கு விளையாடிய அம்பதி ராயுடு அதன் பிறகு ரூ.6.75 கோடிக்கு விளையாடினார். நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் அம்பதி ராயுடு 19 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சாம்பியனானது.

இந்த தொடருடன் அம்பதி ராயுடு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 204 போட்டிகளில் விளையாடி 4332 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஒரு சதமும், 22 அரைசதமும் அடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கையோடு ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போதே அம்பதி ராயுடு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்று கூறப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ரன்களில் ஆட்டமிழந்த பாட்டம் 6 பிளேயர்ஸ்!

இந்த நிலையில் தான் அம்பதி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் இருந்தனர். இது குறித்து ஒய்எஸ்ஆர் காங்கரிஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், கூறியிருப்பதாவது: அம்பாதி ராயுடு, முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். துணை முதல்வர் நாராயண சாமி, எம்பி பத்திரெட்டி மிதுன் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

India vs South Africa: 5 டெஸ்ட் கிரிக்கெட் – 2022 முதல் 2023 வரையில் தோல்வியில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அம்பாதி ராயுடு வரும் நாடாளமன்ற தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பாதி ராயுடு குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், மசூலிப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதியில் அவர் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், ராயுடு அரசியலில் நிலையான இடம் பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Test: 3 நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – SA 32 ரன்கள் இன்னிங்ஸ் வெற்றி – இந்திய அணிக்கு தோல்வியோடு முடிந்த 2023!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios