MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • India vs South Africa: 5 டெஸ்ட் கிரிக்கெட் – 2022 முதல் 2023 வரையில் தோல்வியில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

India vs South Africa: 5 டெஸ்ட் கிரிக்கெட் – 2022 முதல் 2023 வரையில் தோல்வியில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

3 Min read
Author : Rsiva kumar
Published : Dec 28 2023, 11:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
South Africa vs India 1st Test

South Africa vs India 1st Test

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
SA vs IND Test Cricket

SA vs IND Test Cricket

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுலின் பொறுப்பான சதத்தால் 245 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் கஜிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

313
SA vs IND

SA vs IND

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா டீன் எல்கரின் அபாராமான பேட்டிங்கால் 408 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய விளையாடிய டீன் எல்கர் 287 பந்துகளில் 28 பவுண்டரி உள்பட 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

413
Centurion Test Match

Centurion Test Match

இவரைத் தொடர்ந்து டேவிட் பெடிங்காம் 56 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் குவித்தது.

513
SA vs IND 1st Test At Centurion

SA vs IND 1st Test At Centurion

இதன் மூலமாக 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தான் கோட்டைவிட்டு விட்டோம், 2ஆவது இன்னிங்ஸிலாவது சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்ப்போம் என்று எந்த வீரரும் நினைக்கவில்லை. வந்த ஒவ்வொரு வீரரும் ஒற்றைப்படை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

613
Rohit Sharma

Rohit Sharma

கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இணைந்து 39 ரன்கள் சேர்த்தனர்.

713
Virat Kohli

Virat Kohli

கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 6, கேஎல் ராகுல் 4, ரவிச்சந்திரன் அஸ்வின் 0, ஷர்துல் தாக்கூர் 2, ஜஸ்ப்ரித் பும்ரா 0, முகமது சிராஜ் 4 என்று வரிசையாக நடையை கட்டினர்.

813
India vs South Africa Test

India vs South Africa Test

கடைசி வரை நிலையாக நின்ற விராட் கோலி அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி மட்டும் 76 ரன்கள் அடிக்கவில்லை என்றால், இந்திய அணி 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கும். கடைசி 6 விக்கெட்டிற்கு இந்திய அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 5 ஆவது விக்கெட்டிற்கு க்ளமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பின் வரிசையில் களமிறங்கிய வீரர்கள் வரையில் அனைவரும் சேர்ந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.

913
IND vs SA Test

IND vs SA Test

தென் ஆப்பிரிக்கா அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 2 இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இந்திய அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று எந்த பிளேயரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரன்களை வாரி கொடுத்தது தான் மிச்சம். எனினும், 2023 ஆம் ஆண்டை இந்திய அணி தோல்வியோடு முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1013
Centurion Test

Centurion Test

இறுதியாக இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலமாக 2023 ஆம் ஆண்டை தோல்வியோடு முடிந்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், இந்த முறையும் அந்த வாய்ப்பை இழந்துள்ளது.

1113
Virat Kohli

Virat Kohli

இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், அதனை இழக்காமல் இருப்பதற்கு 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்த முறையும் தென் ஆப்பிரிக்கா தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

1213
Centurion Test

Centurion Test

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா – ஜோகன்னஸ்பர்க் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

1313
IND vs SA Test Live

IND vs SA Test Live

இந்தியா – தென் ஆப்பிரிக்கா – கேப் டவுன் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியா – இங்கிலாந்து – பிர்மிங்காம் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியா – ஆஸ்திரேலியா – ஓவல் – 2023 – 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா – செஞ்சூரியன் – 2023 – 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கே. எல். ராகுல்
ரோகித் சர்மா
ஷர்துல் தாக்கூர்
இந்திய கிரிக்கெட் அணி
விராட் கோலி
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 2nd Test: 2வது டெஸ்டில் இந்தியாவிற்கு பேரதிர்ச்சி... அடுத்தடுத்து விக்கெட் இழந்து தவிப்பு
Recommended image2
New Zealand vs India: பொறுமையை சோதித்த பிளண்டெல்... பொட்லம் பண்ணிய இந்தியா... முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஆல் அவுட்
Recommended image3
NZ vs IND : 2வது டெஸ்டிலும் அதே மிஸ்டேக் செய்த இந்தியா... முதல் நாள் முடிவில் நியூசிலாந்து ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved