விராட் கோலியின் தந்தை ஒரு கிரிமினல் வழக்கறிஞர் - கோலியின் சகோதரி, சகோதரன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

விராட் கோலியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது அப்பா, அம்மா, சகோதரி, மகன், மகள் என்று அவரது குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…

All You need to know about Virat Kohli's Father, Mother, Brother, Sister, Wife, Daughter and Son check details here rsk

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் ஆர்சிபி விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இன்று ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையிலான 10ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக விராட் கோலியின் குடும்பத்தினர் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க…

விராட் கோலியின் அப்பா:

விராட் கோலியின் தந்தை பிரேம் கோலி, ஒரு கிரிமினல் வழக்கறிஞர். கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 54ஆவது வயதில் பக்கவாதம் காரணமாக உயிரிழந்தார். தந்தை இறந்த சோகத்தில் இருந்த போதிலும் கூட, விராட் கோலி ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கர்நாடகா அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக விளையாடினார். இதில், அவர் 90 ரன்கள் குவித்தார்.

விராட் கோலியின் அம்மா:

விராட் கோலியின் தாய் சரோஜ் கோலி. பிரேம் மற்றும் சரோஜ் கோலிக்கு விராட் கோலியுடன் இணைந்து 3 குழந்தைகள். சரோஜ் கோலி இல்லத்தரசி.

விராட் கோலியின் சகோதரர்:

விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி. உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். இவரது ஜிம் ஒர்க் அவுட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இது தவிர கிரிக்கெட்டை ஆர்வமுடன் உற்று நோக்குவார். சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு தனது சகோதரரின் அணிகளை உற்சாகப்படுத்துகிறார். சேத்னாவை மணந்த விகாஸுக்கு ஆரவ் கோலி என்ற மகன் உள்ளார்.

விராட் கோலியின் சகோதரி

விராட்டின் சகோதரி பாவனா கோலி திங்க்ரா பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்ற போதிலும், இவர், கோலியின் One8 Select என்ற பேஷன் கடையிலும், குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலும் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

விராட் கோலியின் மனைவி:

விராட் கோலியின் மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜனவரி 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கு வாமிகா என்ற மகள் பிறந்தாள்.

விராட் கோலியின் மகள்

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்களது முதல் பெண் குழந்தைக்கு வாமிகா என்று பெயரிட்டனர். விராட் கோலி தனது பெயரின் முதல் எழுத்தில் உள்ள வி என்ற முதல் எழுத்தின் அடையாளமாக வாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விராட் கோலியின் மகன்

விராட் கோலி கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததை சமூக வலைதளத்தில் அறிவித்தார். மகனுக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அகாய் பிறந்ததைத் தொடர்ந்து அவரது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios