Asianet News TamilAsianet News Tamil

இது ரொம்ப மோசமான செயல்.. கில்கிறிஸ்ட், பிரெட் லீ வரிசையில் இணைந்த அக்தர்

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும். 

akhtar oppose for players name and number present in test cricket jersey
Author
Pakistan, First Published Aug 5, 2019, 11:51 AM IST

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அப்படியான ஒரு ஐசிசி தொடர் இல்லாமல் இருந்தது. 

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடந்துவரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி. 

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகளும் ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி. 

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும். 

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போலவே டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஜெர்சியிலும் வீரர்களின் பெயரும் நம்பரும் போட்டுக்கொள்ளலாம் என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெயர் மற்றும் நம்பர் பொறித்த ஜெர்சிதான் அணிந்து ஆடிவருகின்றனர். 

akhtar oppose for players name and number present in test cricket jersey

இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் பிரெட் லீ ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதை பார்க்கவே சகிக்கவில்லை என்கிற ரீதியில் இருவரும் கடுமையாக எதிர்த்திருந்தனர். 

இந்நிலையில், கில்கிறிஸ்ட், பிரெட் லீ வரிசையில் அக்தரும் இணைந்துள்ளார். டெஸ்ட் ஜெர்சியில் பெயரும் நம்பரும் போடுவதற்கு அக்தரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அக்தர், டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்சியில் வீரர்களின் பெயரும் நம்பரும் போட்டிருப்பது ரொம்ப மோசம். டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தை கெடுக்கும் விதமாக இப்படி செய்யக்கூடாது. இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios