Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் ஃபைனல் மாதிரியே நடந்த டிஎன்பிஎல் நெல்லை மேட்ச்: ஆரம்பிச்சு வச்ச அஜிதேஷ், முடிச்சு கொடுத்த பொய்யாமொழி!

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

Ajitesh Guruswamy and M Poiyamozhi played well and Nellai Royal Kings scored 182 in last ball
Author
First Published Jun 17, 2023, 11:49 AM IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு முன்னதாக நடந்த முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதே போன்று நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து லைகா கோவை கிங்ஸ் மற்றும் ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 6ஆவது போட்டி தற்போது கோயம்புத்தூரில் நடந்து வருகிறது.

ஒரு போதும் ஒரு பந்து வீச்சாளராக மாறவே கூடாது – ரவிச்சந்திரன் அஸ்வின் ஃபீல் அன்ஹேப்பி!

லைகா கோவை கிங்ஸ்:

பி சச்சின், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), முகமது, கிரண் ஆகாஷ், மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்ரமண்யன், கே கௌதம் தாமரை கண்ணன்

நெல்லை ராயல் கிங்ஸ்:

அருண் கார்த்திக் (கேப்டன்), நிதிஷ் ராஜகோபால், எஸ் ஜே அருண் குமார், சோனு யாதவ், அஜிதேஷ் குருசாமி, ரிதிக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்‌ஷய் ஜெயின், மோகன் பிரசாந்த், சந்தீப் வாரியர், பொய்யாமொழி, மிதுன்

112 அடிச்சு கொடுத்த அஜிதேஷ் குருசுவாமி: வின்னிங் ஷாட் கொடுத்த பொய்யாமொழி: த்ரில் வெற்றி பெற்ற நெல்லை!

இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லைகா ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் சச்சின் 0 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ்குமார் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சாய் சுதர்சன் வழக்கம் போன்று தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார். இதில், அவர் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 52 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்த முறை 10 ரன்களில் தனது சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இதற்கு முன்னதாக முதல் போட்டியில் 86 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து வந்த ராம் அரவிந்த் 18 ரன்களிலும், ஷாருக்கான் 17 ரன்களிலும் முகிலேஷ் 15 ரன்களிலும் ஆட்டமிழக்க இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

ஒரு பந்தில் 18 ரன், ஒரே பந்துக்கு 2 டிஆர்.எஸ் என்று டிஎன்பிஎல் தொடரில் நடந்த சுவாரஸ்யங்கள்!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் அருண் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஜிதேஷ் குருசுவாமி 60 ரன்களில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உள்பட 112 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக கடைசி ஓவரில் மட்டும் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அஜிதேஷ் குருசுவாமி கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தார். 3ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4ஆவது பந்தில் ரன் எடுக்க ஓடிய போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்து வீச்சாளர் பொய்யாமொழி 5ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தார்.

கடைசி பந்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், பொய்யாமொழி ஒரு ரன் அடிக்கவே நெல்லை அணி வெற்றி பெற்றது. இறுதியாக 20 ஓவர்களில் நெல்லை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios