இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், தற்போது வழங்கப்படும் ரூ.1 கோடி ஊதியத்தை உயர்த்தி அவருக்கு கூடுதலாக ஊதியம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்த அஜித் அகர்கர் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 191 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1269 ரன்களும், 288 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 571 ரன்களும், 58 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ட்ரீம் 11 ஒப்பந்தம்; பிசிசிஐக்கு ரூ.358 கோடி வருமானமா?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்தார். அதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டார். இதற்கிடையில், இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவருக்கான பதவிக்கு 2 முறை விண்ணப்பித்திருந்தார்.

ரூ.4 கோடி மதிப்புள்ள காளையை வாங்கி இறைச்சியை ஏழைகளுக்கு கொடுத்த ஷாகீத் அப்ரிதி!

ஆனால், தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சேத்தன் சர்மாவின் ஸ்டின் ஆபரேஷன் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேர்வுக்குழு தலைவர் பதவி கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் காலியாக இருந்தது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் தேர்வுக்குழு தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், கடந்த ஜூன் 7 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.

Diamond League 2023: டைமண்ட் லீக் தடகள போட்டி! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா..!

இதையடுத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. மேலும், இதுவரையில், ரூ.1 கோடி வரையில் தான் தலைவர் பதவிக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதையும் படிங்க;- முதலைமைச்சர் கோப்பை அறிமுகம்: நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே இலக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்த நிலையில், தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான நேரம் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த நிலையில், தான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை ரூ.1 கோடியிலிருந்து உயர்த்தி ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Scroll to load tweet…