Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: விராட் கோலியின் பல பிரச்னைகளுக்கு ஹர்திக் பாண்டியா தான் தீர்வு..!

ஹர்திக் பாண்டியா பந்துவீசினால் டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ajit agarkar believes if hardik pandya bowls virat kohlis lot of problems will be solved in t20 world cup
Author
Chennai, First Published Jul 15, 2021, 9:05 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்காக இந்தியா உட்பட அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன.

குறிப்பாக விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறது. அதனால், அணியின் பெஸ்ட் ஆடும் லெவனுடன் களமிறங்கும் முனைப்பில் உள்ளது.

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, கடந்த 2 ஆண்டுகளாகவே பந்துவீசவில்லை. அது இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை பாதிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா பந்துவீசவைக்கப்படவில்லை. ஆனால் இந்திய அணிக்காக ஆடும்போது ஒரு ஆல்ரவுண்டராக அவர் பந்துவீசியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அப்படியில்லை என்றால் அவரை அணியில் எடுப்பதற்கான அவசியமும் இல்லாமல் போய்விடும். ஏனெனில் அவர் ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதுதான் இந்திய அணியில் அவருக்கான நிரந்தர இடத்தை பெற்றுக்கொடுத்தது. அண்மைக்காலத்தில், இதுவரை அவர் பெரிதாக பந்துவீசவில்லை என்றாலும், இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் பந்துவீசுவதை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா பந்துவீசுவது டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எந்தளவிற்கு முக்கியம் என்பது குறித்து பேசியுள்ள அஜித் அகார்கர், ஹர்திக் பந்துவீச ஆரம்பித்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஐபிஎல்லுக்கு முன் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா, ஐபிஎல்லில் ஏன் பந்துவீசவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு காயம் இருந்திருந்தால், இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவர் தான் இந்திய அணியின் ஆறாவது பவுலிங் ஆப்சன். அவர் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர். அவர் பந்துவீசினால், ஒரு கேப்டனாக விராட் கோலிக்கு இருக்கும் நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். 

ஹர்திக் பாண்டியா பந்துவீசினால், இந்திய அணி காம்பினேஷனுக்கு நல்ல பேலன்ஸை கொடுக்கும். அவர் வெறும் பேட்ஸ்மேனாக கூட ஆடலாம். ஆனால் அவர் இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீசினார். அவர் பந்துவீசாதபோது, இந்திய அணிக்கு எவ்வளவு பெரிய அழுத்தம் உருவானது என்பதை பார்த்தோம். எனவே அவர் பந்துவீசினால் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios