Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் ஏமாற்றமளித்த ஜடேஜா, ரஹானே..! அரைசதத்தை தவறவிட்ட கோலி.. ரிஷப் - ஷர்துல் தோள்களில் இறங்கிய பொறுப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸிலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் மீண்டும் ஸ்கோர் செய்யமுடியாமல் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, கேப்டன் விராட் கோலியும் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 

ajinkya rahane and ravindra jadeja failed again in fourth test against england and kohli out for 44 runs
Author
Oval, First Published Sep 5, 2021, 5:16 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் மட்டுமே அடிக்க, இங்கிலாந்து அணி 290 ரன்கள் அடித்தது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே தனது முதல் சதத்தையும் டெஸ்ட்டில் தனது 8வது சதத்தையும் பதிவு செய்தார். 127 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து அருமையாக ஆடி அரைசதம் அடித்த புஜாராவும் அதே ஓவரில் 61 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கோலியும் ஜடேஜாவும் இணைந்து 3வது நாள் ஆட்டத்தை முடித்தனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணீ 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்திருந்தது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை கோலியும் ஜடேஜாவும் தொடர்ந்தனர். ஜடேஜா 17 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ரஹானே டக் அவுட்டானார்.

ஜடேஜாவின் பேட்டிங்கிற்காகத்தான், அஷ்வினை எடுக்காமல் ஜடேஜா அணியில் எடுக்கப்படுகிறார். ஆனால் அவர் இந்த தொடரில் ஒரு இன்னிங்ஸில் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 5ம் வரிசையில் ஆட கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளவில்லை. அதேபோலவே, துணை கேப்டனும் சீனியர் வீரருமான ரஹானேவும் ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து ஏமாற்றமளித்துவருகிறார். இந்த தொடரில் படுமோசமாக சொதப்பியதையடுத்து, ரஹானேவை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. ஆனாலும் ரஹானே மீது நம்பிக்கை வைத்து ஆடவைக்கப்படுகிறார். ஆனால் ரஹானேவோ தொடர்ந்து திணறிவருகிறார்.

இதையடுத்து கேப்டன் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர, நன்றாக ஆடிக்கொண்டிருந்த கோலி 44 ரன்னில் மொயின் அலியின் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

312 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 213 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், கோலி ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட்டும் ஷர்துல் தாகூரும் ஆடிவருகின்றனர்.
 -
 

Follow Us:
Download App:
  • android
  • ios