Asianet News TamilAsianet News Tamil

பிளே ஆஃப் வாய்ப்பு போச்சு: முதல் அணியாக வெளியேறிய டெல்லி கேபிடல்ஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

After Loss Against PBKS DC become the first team to be eliminated from 16th Season of IPL 2023
Author
First Published May 14, 2023, 10:59 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் வாய்ப்புக்காக போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான் 59ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணிக்கு பிராப்சிம்ரன் அதிரடியாக ஆடி 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங் சரியில்லாம போச்சு: பஞ்சாப்பிடம் சரண்டரான டெல்லி!

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஓரளவு நல்ல ஸ்கோரான 167 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருந்த போதிலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு டெல்லி கேபிடல்ஸ் 136 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? GT, RCB, MI அணிகளை ஓட ஓட விரட்டினால் அமையுமா?

இந்த தோல்வியின் மூலமாக 8 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.  ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. இதில், ஒன்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியையும், இன்னொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை ஜெயிக்க கண்டிப்பாக இந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கணும் – ரவி சாஸ்திரி!

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக டெல்லி கேபிடல்ஸ் வெளியேறியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்புகள்:

2008 – டெல்லி டேர்டெவில்ஸ் – 14 போட்டிகள் – 7 வெற்றி – 6 தோல்வி – 1 முடிவு இல்லை – 15 புள்ளிகள்

2009 – டெல்லி டேர்டெவில்ஸ் – 14 போட்டிகள் – 10 வெற்றி – 4 தோல்வி – 20 புள்ளிகள்

2012 – டெல்லி டேர்டெவில்ஸ் – 16 போட்டிகள் – 11 வெற்றி – 5 தோல்வி – 22 புள்ளிகள்

2019 – டெல்லி கேபிடல்ஸ் – 14 போட்டிகள் – 9 வெற்றி – 5 தோல்வி – 18 புள்ளிகள்

2020 – டெல்லி கேபிடல்ஸ் – 14 போட்டிகள் – 8 வெற்றி – 6 தோல்வி – 16 புள்ளிகள்

2021 – டெல்லி கேபிடல்ஸ் – 14 போட்டிகள் – 10 வெற்றி – 4 தோல்வி – 20 புள்ளிகள்

2023 – டெல்லி கேபிடல்ஸ் – 12 போட்டிகள் – 4 வெற்றி – 8 தோல்வி – 8 புள்ளிகள்

கடைசியாக கொடுத்த வாய்ப்பு: நிரூபித்து காட்டிய விஷ்ணு வினோத்!

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios