IND vs AFG: 4 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான்!

இந்தியாவிற்கு எதிராக இன்றைய போட்டியில் 272 ரன்கள் குவித்ததன் மூலமாக ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக ரன்கள் குவித்துள்ளது.

After 4 years, Afghanistan scored the most runs in the 2023 Cricket World Cup against India at Delhi rsk

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9ஆவது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 32 ரன்கள் குவித்தது. இதில், தொடக்க வீரர் ஜத்ரன் 22 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டானார்.

ஆட்டம் காட்டிய ஹஷ்மதுல்லா, உமர்சாய் – ஆப்கானிஸ்தான் 272 ரன்கள் குவிப்பு, பும்ரா 4 விக்கெட்!

இவரைத் தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்க, குர்பாஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹஷ்மாதுல்லா ஷாகிடி களமிறங்கினார். ஒருபுறம் ரஹ்மத் ஷா 16 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்து அஷ்மதுல்லா உமர்சாய் களமிறங்கினார். அவர், 69 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Happy Birthday Hardik Pandya: மைதானத்திலேயே கேக் வெட்டி 30ஆவது பிறந்தநாள் கொண்டாடிய ஹர்திக் பாண்டியா!

இவரைத் தொடர்ந்து முகமது நபி களமிறங்கினார். இதற்கிடையில் 88 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 80 ரன்கள் குவித்த கேப்டன் ஷாகிடி ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பின்வரிசை வீரர்கள் நஜிபுல்லா ஜத்ரன் 2, ரஷீத் கான் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக முஜீப் உர் ரஹ்மான் 10 ரன்களுடனும், நவீன் உல் ஹக் 9 ரன்களுடனும் களத்தில் இருக்கவே, ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.

இதன் மூலமாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அதிக ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 247/8 ரன்கள் எடுத்திருந்தது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 288 ரன்கள் எடுத்திருந்தது. மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக முறை 50 ரன்களுக்கு மேல் குவித்தவர்களில் ஹஷ்மதுல்லா ஷாகிடி – 3, நஜிபுல்லா ஜத்ரன் – 2, சமியுல்லா ஷின்வாரி – 2 ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்!

ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உலகக் கோப்பையில் ஹஷ்மதுல்லா ஷாகிடி 80 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 76 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட் கைப்பற்றினார். இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

IND vs AFG: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உலகக் கோப்பை போட்டி சம்பளம் முழுவதையும் வழங்குவதாக அறிவித்த ரஷீத் கான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios