Asianet News TamilAsianet News Tamil

AFG vs BAN 3rd Match: ஷாகிப் அல் ஹசன், மெஹிடி ஹசன் சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான் – 156க்கு ஆல் அவுட்!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Afghanistan Scored 156 Runs in 3rd match against Bangladesh in Cricket World Cup 2023 at Dharamsala rsk
Author
First Published Oct 7, 2023, 2:56 PM IST

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பையின் 3ஆவது லீக் போட்டி தற்போது தரமசாலா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரன் இருவரும் நிதானமாக விளையாடினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 47 ரன்கள் குவித்தது. இப்ராஹிம் ஜத்ரன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs AUS:உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

அடுத்து வந்த ரஹ்மத் ஷா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹஷ்மதுல்லா ஷாகிடி 18 ரன்களிலும், அஸ்மதுல்லா உமர்சாய் 22 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சில் வங்கதேச அணியைப் பொறுத்த வரையில், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிடி ஹசன் மிராஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட் கைப்பற்றினார். தஸ்கின் அகமது மற்றும் முஸ்தஃபிஜூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!

இதையடுத்து 157 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட வங்கதேச அணி விளையாடி வருகிறது. இதில், தஸ்கின் அகமது 5 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். லிட்டன் தாஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது வரையில் வங்கதேச அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

BAN vs AFG: உலகக் கோப்பை 3ஆவது லீக் போட்டி: டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு!

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாகிடி (கேப்டன்), முகமது நபி, நஜ்புல்லா ஜத்ரன், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி,

வங்கதேசம்:

லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ, மெஹிடி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தஃபிஜூர் ரஹ்மான்.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பணியின் போது 14 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த 52 வயதான முருகன் உயிரிழப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios