ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 1-0 என வென்றது ஆஃப்கானிஸ்தான் அணி.
ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும்3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் இன்னசெண்ட் கையா 63 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ரியான் பர்ல் அரைசதம் அடித்தார். ரியான் 51 ரன்கள் அடித்தார். 50 ஓவரில் ஜிம்பாப்வே அணி 228 ரன்கள் அடித்தது.
229 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இப்ராஹிம் ஜட்ரானும் ரஹ்மத் ஷாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ரஹ்மத் ஷா இந்த போட்டியிலும் 88 ரன்களை குவித்தார். இப்ராஹிம் ஜட்ரான் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 120 ரன்கள் அடித்த இப்ராஹிம் கடைசி வரை களத்தில் நின்று ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார்.
8 விக்கெட் வித்தியாசத்தில் 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி 1-0 என தொடரை வென்றது.
