ஆஃப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான முகமது ஷேஷாத்தின் ஒப்பந்தத்தை காலவரையற்ற சஸ்பெண்ட் செய்துள்ளது ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

உலக கோப்பையின் இடையே முகமது ஷேஷாத்திற்கு காயம் என்று கூறி இங்கிலாந்திலிருந்து ஆஃப்கானிஸ்தானுக்கு திருப்பியனுப்பப்பட்டார். ஆனால் நாடு திரும்பியதும், தனக்கு எந்த காயமும் இல்லை எனவும் தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார் ஷேஷாத். 

அப்போதே ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஷேஷாத்திற்கு கட்டம் கட்டியதாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், தற்போது ஷேஷாத் பாகிஸ்தானில் பயிற்சி எடுத்துவருகிறார். ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் ஷேஷாத் அனுமதி பெறாமல் பாகிஸ்தானில் இருக்கிறார்.

இதையும் படிங்க:- ஆத்திரத்தில் கணவனின் அந்த உறுப்பை வெட்டி நாய்க்கு போட்ட மனைவி... நடுநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்..!

எனவே ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, ஷேஷாத்தின் ஒப்பந்தம் காலவரையற்ற சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. அப்படியே ஷேஷாத் ஓரங்கட்டப்பட்டு விடுவார் என்றும் கருதப்படுகிறது. எனவே ஷேஷாத்தின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

இதையும் படிங்க:- உதயநிதி ஸ்டாலினை வரவழைத்து அதிர்ச்சி கொடுத்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள்... திமுகவில் திடீர் பரபரப்பு..!