கொடுமை படுத்திய கணவரைக் கொன்று ஆத்திரம் தீராமல் அவரது ஆணுறுப்பை வெட்டி, நாய்க்கு உணவாக போட்ட மனைவியின் செயல் நடுநடுங்க வைத்துள்ளது.

 

உக்ரைன் நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஓபாரிவ் என்ற கிராமத்தில் 49 வயதான ஒலேக்‌ஷாண்ட்ர் குடும்பம் வசித்து வந்தது. கடந்த மாதம் 25-ம் தேதி இரவுப்பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஒலேக்‌ஷாண்ட்ர் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். காவல்துறை நடத்திய விசாரணையில் கொலை நடந்த அன்று ஒலேக்‌ஷாண்ட்டரின் 47 வயதான மனைவி மரியா, ரத்தக்காயங்களுடன் வீட்டுக்கு வெளியே நின்றதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாரியவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக காவல்துறையினரிடம் ஒலேக்‌ஷாண்டர் மனைவி அளித்த வாக்குமூலத்தில் ''பல ஆண்டுகளாக கணவர் என்னை சித்தரவதை செய்து வந்ததால், அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என திட்டமிட்டேன். இதையடுத்து வேலை முடிந்து வந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரை, கழுத்தை நெரித்துக் கொன்றேன். ஆத்திரம் தீராததால் ஒரு கோடாரியைக் எடுத்து கணவரின் தலையையும் வெட்டினேன். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. கணவரின் ஆணுறுப்பை வெட்டி, நான் வளர்க்கும் இரண்டு நாய்களுக்கு உணவாகப் போட்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ரத்த கறையுடன் வெளியே வந்தபோது, அவரது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மரியாவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

இதற்கிடையே ஒலேக்‌ஷாண்ட்ர் தினமும் மரியாவை அடித்து துன்புறுத்துவது வழக்கம் எனவும், அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் எனவும்  அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்கள். இந்த சம்பவம் உக்ரைன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.