பிக்பேஷ் லீக்கில் மெல்பர்ன் ரெனெகேட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி, 20 ஓவரில் 202 ரன்களை குவித்து 203 ரன்கள் என்ற கடின இலக்கை மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
பிக்பேஷ் டி20 லீக்கில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்பர்ன் ரெனெகேட்ஸ் இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி:
மார்டின் கப்டில், மார்கஸ் ஹாரிஸ், சாம் ஹார்ப்பெர் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஜோனாதன் வெல்ஸ், மேத்யூ கிரிட்ச்லி, வில் சதர்லேண்ட், ருவாந்தா கெல்லெபோதா, டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், டேவிட் மூடி.
பும்ராவின் முதுகுவலி.. இந்தியாவிற்கு தலைவலி..! நியூசி., & ஆஸி., தொடரிலிருந்தும் விலகுகிறார் பும்ரா
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:
மேத்யூ ஷார்ட் (கேப்டன்), ரியான் கிப்சன், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), பென் மானெண்டி, கேமரூன் பாய்ஸ், வெஸ் அகர், ஹாரி கான்வே.
முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 22 பந்தில் 38 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான கிப்சன் 24 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 37 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 69 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்துக்கொடுத்தார்.
காலின் டி கிராண்ட் ஹோம் 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்களை விளாசி சிறப்பாக முடித்துக்கொடுக்க, 20 ஓவரில் 202 ரன்களை குவித்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி, 203 ரன்கள் என்ற கடின இலக்கை மெல்பர்ன் ரெனெகேட்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
