இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணி கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக ஹேசில்வுட்டை அணியில் சேர்த்துள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு சின்னசாமி ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் ஆட வார்னரும் ஃபின்ச்சும் களத்திற்கு வந்தனர். 

கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் தனது இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் வார்னரை ஷமி வீழ்த்திவிட்டார். இரண்டாவது போட்டியிலும் ஷமியின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில்தான் வார்னர் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடி சதமடித்த வார்னரை, கடந்த போட்டியிலும் இந்த போட்டியிலும் சோபிக்க விடாமல், ஆரம்பத்திலேயே ஷமி அனுப்பிவிட்டார்.

வெறும் 3 ரன்களில் வார்னர் அவுட்டாக, நான்காவது ஓவரிலேயே ஸ்மித் களத்திற்கு வந்துவிட்டார். ஸ்மித்தும் ஃபின்ச்சும் நன்றாக ஆடிய நிலையில், அந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஷமி வீசிய பந்தை ஸ்மித், பேக்வர்டு பாயிண்ட் திசையில் அடித்தார். அதற்கு ஃபின்ச் ரன் ஓட, ஆரம்பத்தில் வேண்டாமென்று சொன்ன ஸ்மித், ஃபின்ச் ஓடிவந்ததை பார்த்து ஓட ஆரம்பித்தார். 

Also Read - மறுபடியும் வார்னரை தட்டி தூக்கிய ஷமி.. ஆரம்பத்துலயே விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

ஆனால் ஜடேஜா பந்தை பிடித்து, நேரடியாக பேட்டிங் முனையில் இருந்த ஸ்டம்பை அடிக்க முயன்றார். இதையடுத்து கொஞ்ச தூரம் ஓடிய ஸ்மித், மீண்டும் கிரீஸுக்கு திரும்பினார். ஜடேஜா விட்ட த்ரோ ஸ்டம்பில் படாமல் சென்றதை அடுத்து, ரன் ஓடிவந்த ஃபின்ச், மீண்டும் எதிர்முனைக்கு ஓட முயன்றார். ஆனால் அதற்குள்ளாக ஷ்ரேயாஸ் ஐயர் பிடித்து ஷமியிடம் வீச, ஷமி பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்தார். இதையடுத்து 19 ரன்களில் ஃபின்ச் ரன் அவுட்டாகி அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து ஸ்மித்தும் லபுஷேனும் சேர்ந்து ஆடிவருகின்றனர்.