Asianet News TamilAsianet News Tamil

கோச்சிங் செய்வது எப்படினு வக்கார் யூனிஸ் கத்துகிட்டா நல்லா இருக்கும்..! பாக்., முன்னாள் வீரர் கடும் தாக்கு

பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய வக்கார் யூனிஸ், பயிற்சி கொடுப்பது எப்படி என்று கற்றுக்கொண்டால் நல்லது என்று பாக்., முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் அறிவுறுத்தியுள்ளார்.
 

aaqib javed advises it would have been better that if waqar younis has learned how to coach
Author
Pakistan, First Published Sep 7, 2021, 8:32 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது. டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அதற்காக மற்ற அணிகளை போல பாகிஸ்தான் அணியும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா பொறுப்பேற்கும் நிலையில், இவர்கள் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். 2019ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக இருந்துவரும் மிஸ்பாவும் வக்காரும், டி20 உலக கோப்பைக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

ரமீஸ் ராஜா, தங்களை அந்த பதவியில் நீடிக்கவிடமாட்டார் என மிஸ்பாவும் வக்காரும் நினைத்ததால் தான், அவர்கள் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

இந்நிலையில், வக்கார் யூனிஸ் குறித்து பேசியுள்ள பாக்., முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத், வக்கார் யூனிஸ் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியபோதெல்லாம் வர்ணனையாளராகத்தான் இருந்திருக்கிறார். கோச்சிங் - வர்ணனை ஆகிய இரண்டையும் தான் மாறி மாறி செய்து வந்திருக்கிறார். இதற்கு பதிலாக அவர் பயிற்சி கொடுப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று ஆகிப் ஜாவேத் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios