டி20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

அதனால் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்த போட்டியை காண ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. இந்தியாவை உலக கோப்பைகளில் வீழ்த்தியதேயில்லை என்ற அழுத்தமே இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தானுக்கு எமனாக அமைந்துவிடுகிறது.

அந்தவகையில், இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான 100% வின்னிங் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், உலக முதல் முறையாக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தானும் களமிறங்குகின்றன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை எடுக்கவில்லை. இளம் மாயாஜால ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியை ஜடேஜாவுடன் 2வது ஸ்பின்னராக எடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. கண்டிப்பாக வருண் ஆடுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.

ஆகாஷ் சோப்ராவின் இந்திய ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

ஆகாஷ் சோப்ராவின் பாகிஸ்தான் ஆடும் லெவன்:

பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப்.