Asianet News TamilAsianet News Tamil

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி..! ஆகாஷ் சோப்ராவின் அணியில் 2 அதிரடி வீரர்களுக்கு இடம் இல்லை

ஆசிய கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
 

aakash chopra picks ideal india squad for asia cup 2022
Author
Chennai, First Published Aug 8, 2022, 4:13 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி 6வது அணியாக ஆசிய கோப்பையில் ஆடும்.

ஆசிய கிரிக்கெட் அணிகளுக்கு ஆசிய கோப்பை தொடர் முக்கியமான ஒன்று. ஆசியளவில் யார் பெரிய அணி என்பதை தீர்மானிக்கும் தொடர் என்பதால் முக்கியமான தொடர். இந்தியா, பாகிஸ்தான் இடையே தான் கடும் போட்டி நிலவும்.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நிறைய வீரர்களுக்கு இடையே அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுவதால், ஆசிய கோப்பைக்கான அணி தேர்வு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - இந்திய ஸ்பின்னர்களிடம் மண்டியிட்டு சரணடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.! கடைசி டி20யிலும் இந்தியா அபார வெற்றி

இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரோஹித்துடன் கேஎல் ராகுலை தொடக்க வீரராகவும், 3ம் வரிசையில் விராட் கோலி,  4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் என கண்டிப்பாக டாப் 4ல் இடம்பெறும் வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக்கை  தேர்வு செய்துள்ள சோப்ரா, சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் தேர்வு செய்யவில்லை. 

ஸ்பின்னர்களாக அஷ்வின், ஜடேஜா, சாஹல் ஆகிய மூவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோருடன் 23 வயது இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலரான அர்ஷ்தீப் சிங்கையும் தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios