சிஎஸ்கே அணிக்காக இந்த ஐபிஎல் சீசனில் எந்த 4 வெளிநாட்டு வீரர்கள் களமிறங்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கடந்த சீசனில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த சீசனில் 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
கடந்த சீசனில் ஆடாத சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த சீசனில் ஆடவிருப்பது அந்த அணிக்கு பெரும் பலம். மேலும் அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் இடத்தை வலுப்படுத்தும் விதமாக மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.

சிஎஸ்கே அணி ஐபிஎல்லுக்காக தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் எந்த 4 வீரர்கள் இறங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஆகாஷ் சோப்ரா பதிலளித்துள்ளார். ஆகாஷ் சோப்ராவிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஆகாஷ் சோப்ரா பதிலளித்தார்.

அதன்படி, ஃபாஃப் டுப்ளெசிஸ், சாம் கரன், இம்ரான் தாஹிர் ஆகிய மூவரையும், இங்கிடி/பிராவோ ஆகிய இருவரில் ஒருவர் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
