Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND அவருக்குத்தான் ஆட்டநாயகன் விருதை கொடுத்திருக்கணும்; ரூட்டுக்கு கொடுத்துட்டாங்க! முன்னாள்வீரர் ஆவேசம்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
 

aakash chopra opines jasprit bumrah was the correct player to get man of the match instead of joe root
Author
Nottingham, First Published Aug 9, 2021, 6:21 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் அடிக்க, இந்திய அணி 278 ரன்கள் அடித்தது. 

95 ரன்கள்  பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 303 ரன்கள் அடித்தது. இதையடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்தது. ஆனால் கடைசி நாளில் மழை பெய்ததால் ஆட்டம் டிரா என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 64 ரன்களும், 2வது இன்னிங்ஸில் சதமும்(109) அடித்த ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும்(28 ரன்கள்) பங்களிப்பு செய்த பும்ராவுக்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா,  பும்ராவிற்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். டாஸ் தோற்ற இந்திய அணியில் பும்ரா பொறுப்புடன் பந்துவீசி இங்கிலாந்தை சுருட்ட உதவினார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 9 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்தார். எனவே அவருக்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios