Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 15வது சீசனில் ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி..?

ஐபிஎல் 15வது சீசனிலிருந்து ஒவ்வொரு அணியும் 5 வெளிநாட்டு வீரர்களை ஆடவைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
 

aakash  chopra opines ipl should allow 5 overseas players from ipl 2022
Author
Chennai, First Published May 14, 2021, 9:03 PM IST

ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் தலா 4 வெளிநாட்டு வீரர்களை ஆடும் லெவனில் சேர்க்க இதுவரை அனுமதிக்கப்படுகிறது. இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனில்(15வது சீசன்) கூடுதலாக 2 அணிகளை சேர்த்து 10 அணிகளை ஆடவைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

எனவே அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இந்நிலையில், அடுத்த சீசனிலிருந்து 10 அணிகள் ஆடவுள்ளதால், அனைத்து அணிகளும் சமபலத்துடன் திகழ்வதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு அணியும் தலா 5 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரிக் இன்ஃபோவில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ஐபிஎல்லில் அடுத்த சீசனிலிருந்து 10 அணிகள் ஆடவுள்ளதால் ஒவ்வொரு அணியும் 5 வெளிநாட்டு வீரர்களை ஆடும் லெவனில் சேர்க்க அனுமதிக்கப்பட வேண்டும். ஐபிஎல்லின் தரத்தை உயர்த்தவே நான் இதை கூறுகிறேன். ஐபிஎல் உலகின் வெற்றிகரமான டி20 லீக் தொடர். எனவே அனைத்து அணிகளுமே சமபலத்துடன் திகழ ஒவ்வொரு அணியிலும் 5 வெளிநாட்டு வீரர்களை ஆட அனுமதிக்க வேண்டும்.

8 அணிகள் இருந்தவரை, ஒவ்வொரு அணியும் 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஆடவைக்க வேண்டும் என்பது சரியானது. ஆனால் 10 அணிகள் ஆடும்போது 5 வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்கலாம். ஏனெனில் சில அணிகள் தரமான உள்நாட்டு வீரர்களை பெற்றிருக்கின்றன. ஆனால் அனைத்து அணிகளும் அப்படி பெற்றிருக்கவில்லை. எனவே ஐபிஎல்லின் தரத்தை போற்றி காக்கும் வகையில், அனைத்து அணிகளும் சமபலத்துடன் திகழ வழிவகை செய்ய, 5 வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios