வெளியில் வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் – கோபத்தில் கொந்தளித்த ரோகித் சர்மா: என்ன நடந்தது?

ரோகித் சர்மா டிக்ளேர் தான் செய்துவிட்டார் என்று கருதி யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் மட்டுமின்றி இங்கிலாந்து வீரர்கள் வெளியில் வருவதைக் கண்ட ரோகித் சர்மா நான் ஒன்றும் டிக்ளேர் செய்யவில்லையே ஏன் வெளியில் வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

A video of Rohit Sharma speaking angrily from the dressing room during the 2nd innings against England is going viral on social media rsk

இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 97ஆவது ஓவர் முடிவில் மைதானத்திற்கு கூல்டிரிங்க்ஸ் கொண்டு வரப்பட்டது. 

அப்போது, டிரெஸ்ஸிங் ரூமிலிருந்த ரோகித் சர்மா 2ஆவது இன்னிங்ஸிற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட வீரர்கள் ரோகித் சர்மா டிக்ளேர் தான் செய்துவிட்டார் என்று நினைத்து களத்திலிருந்து பெவிலியன் நோக்கி வந்தார்கள். இதைக் கண்ட ரோகித் சரமா கோபம் அடைந்த நிலையில் உங்களை யார் வெளியில் வரச் சொன்னது? நான் எப்போது டிக்ளேர் செய்தேன்? இன்னும் கொஞ்ச நேரம் சென்று விளையாடுங்கள் என்று ஆத்திரமாக பேசினார். இதை கண்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதுதான் இந்தியா டிக்ளேர் செய்துவிட்டது. ஏன் மீண்டும் பேட்டிங் செய்ய சொல்றாங்க என்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடைசியாக ரோகித் சர்மா டிக்ளேர் செய்யவில்லை என்பதை அறிந்த நிலையில் மீண்டும் 2ஆவது இன்னிங்ஸ் தொடங்கியது.

ரெஹான் அகமது வீசிய ஓவரில் சர்ஃபராஸ் கான் 6, 4, 6, 0, 1 என்று ரன்களை குவிக்க இந்தியா 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக இந்தியா 556 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். பின்னர் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios