சிஎஸ்கே அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர், உதவியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் என மொத்தம் 60 பேருடன் தனி விமானத்தில் துபாய்க்கு சென்றது. துபாய்க்கு சென்றதுமே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். 

அதில், ஒரு மிதவேகப்பந்து வீச்சாளர், அணி உதவியாளர், அணி நிர்வாகத்தின் சீனியர் அதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன், சென்னையிலேயே சிஎஸ்கே அணியை சேர்ந்த அனைவருக்கும் 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது யாருக்கும் கொரோனா உறுதியாகவில்லை. இந்நிலையில், துபாயில் சிஎஸ்கே அணியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை தனிமைப்படுத்தல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.