35 கோடி ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்த ஐபிஎல் 2024……நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஐபிஎல் மோகம்!
ஐபிஎல் 2024 தொடரின் முதல் 10 போட்டிகளை மட்டுமே தொலைக்காட்சி வாயிலாக 35 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
நாளுக்கு நாள் ஐபிஎல் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள், சுட்டி குழந்தைகள் கூட ஐபிஎல் போட்டிகளை ரசிக்கின்றனர். கிரிக்கெட் வீரர்களை கடவுளாக நினைத்து வழிபாடும் செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களது காலில் விழுந்து வணங்குவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று ரசிகர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தான் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் சிஎஸ்கே அணியானது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 17ஆவது சீசனில் முதல் 10 போட்டிகள் வரையில் 35 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்வையாளர்களை கடந்து இந்த ஐபிஎல் தொடரானது புதிய சாதனை படைத்துள்ளது.