இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர். டி20 அணியில் குல்தீப் மற்றும் சாஹல் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரும் எடுக்கப்பட்டுள்ளனர். 

பும்ராவிற்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் ஒருநாள் அணியில் நவ்தீப் சைனியும் டி20 அணியில் தீபக் சாஹரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியில் 3 வீரர்கள் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் பொதுவாகவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்துதான் அதிகமான வீரர்கள் இடம்பெறுவார்கள். இந்த மாநிலங்கள் தான் இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும். குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி தான் அதிக ஆதிக்கம் செலுத்தும்.

இந்த முறை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 அணியில் மூன்று ராஜஸ்தான் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். கலீல் அகமது, தீபக் சாஹர், ராகுல் சாஹர் ஆகிய மூவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜஸ்தான் வீரர்கள் இடம்பெறுவது இதுதான் முதன்முறை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டி20 அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.