கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல் 13வது சீசன், வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன. எனவே ஐபிஎல் அணிகளும் வீரர்களும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றனர். 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் நடப்பதால், கொரோனாவிலிருந்து வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாக்கும் விதமாக, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படும். அந்தவகையில், நெறிமுறைகளை மீறி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர் என யாருமே செயல்படமுடியாது. கொரோனா நெறிமுறைகளுக்குட்பட்டே நடக்கவேண்டும். 

ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் அங்கு செல்ல தயாராகிவரும் நிலையில், ஒரு அணிக்கு 24 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு அணி அதிகபட்சம் 24 வீரர்களை மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து செல்ல முடியும். ஐபிஎல்லின் பெரும்பாலான அணிகளில் அதிகபட்சமாக 24 வீரர்கள் இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகளில் ஒரு வீரர் கூடுதலாக உள்ளார். எனவே இந்த 3 அணிகளும் ஒரு வீரரை மட்டும் கழட்டிவிட்டு செல்ல வேண்டியுள்ளது. இது பெரிய பாதிப்பாக அமையாது. ஆனால் அதேவேளையில், தொடருக்கு இடையே தேவை ஏற்பட்டால், கழட்டிவிடப்பட்ட வீரரை அழைத்துக்கொண்டு வேறு வீரரை விடுவித்துக்கொள்ளலாம். இந்த மூன்று அணிகளும் தலா ஒரு வீரரை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து செல்ல முடியாத தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது. 

சன்ரைசர்ஸ் அணி:

கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ரஷீத் கான், முகமது நபி, அபிஷேக் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, ரிதிமான் சஹா, கோஸ்வாமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், ஷேபாஸ் நதீம், பில்லி ஸ்டேன்லேக், பாசில் தம்பி, டி.நடராஜன், மிட்செல் மார்ஷ், ஃபேபியன் ஆலன், ப்ரியம் கர்க், விராட் சிங், சந்தீப் பாவனகா, சஞ்சய் யாதவ், அப்துல் சமத்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி::

கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், அர்ஷ்தீப் சிங், தர்ஷன் நால்கண்டே, ஹார்டஸ் வில்ஜோயன், ஹர்ப்ரீத் ப்ரார், கருண் நாயர், மந்தீப் சிங், முகமது ஷமி, முஜீபுர் ரஹ்மான், முருகன் அஷ்வின், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான், கிருஷ்ணப்பா கௌதம், ஜெகதீஷா சுஜித், மேக்ஸ்வெல், கோட்ரெல், கிறிஸ் ஜோர்டான், ரவி போஷ்னோய், ப்ரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, ஜிம்மி நீஷம், தஜிந்தர் திலான், இஷான் போரெல். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், மாஹிபால் லோம்ரார், மனன் வோரா, ரியான் பராக், ஷேஷான்க் சிங், வருண் ஆரோன், ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் டெவாட்டியா, அன்கித் ராஜ்பூட், மயன்க் மார்கண்டே, ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனாத்கத், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர், டாம் கரன், ஆண்ட்ரூ டை, ஒஷேன் தாமஸ், கார்த்திக் தியாகி, அனுஜ் ராவத், அனிருதா அசோக் ஜோஷி, ஆகாஷ் சிங்.