ஐதராபாத் அணிக்கு எதிரான முதலாவது எலிமினேட்டர் போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டத்தால் இமாலய இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி, குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. 244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஹைதராபாத் அணியில் நிதிஷ் குமார் ரெட்டி 20 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து டாப் ஸ்கோரராக இருந்தார். சலீல் அரோரா 21 பந்துகளில் 35 ரன்களும், இஷான் கிஷன் 11 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வெள்ளிக்கிழமை நியூ சண்டிகரில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் எதிர்கொள்கிறது. குவாலிஃபையர் 1-ல் ஆர்சிபி அணியிடம் குஜராத் தோற்றது குறிப்பிடத்தக்கது. 

ஆரம்பத்திலேயே அதிர்ச்சி244 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய இரண்டாவது பந்திலேயே, அபிஷேக் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் துருவ் ஜுரெல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் பந்திலிருந்தே அடித்து ஆடிய இஷான் கிஷன், 11 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு பயம் காட்டினார். ஆனால், அவரது ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆர்ச்சரின் வேகத்தில் டோனோவன் ஃபெரேராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

Scroll to load tweet…

அடுத்து அதிரடி காட்டத் தொடங்கிய டிராவிஸ் ஹெட்டும் (8 பந்தில் 17) ஆர்ச்சரின் வேகத்தில் போல்ட் ஆனார். ஸ்மரன் ரவிச்சந்திரனை (1) நான்ட்ரே பர்கர் வெளியேற்ற, பவர்பிளே முடிவில் ஹைதராபாத் அணி 71 ரன்கள் எடுத்திருந்தாலும், 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நம்பிக்கையாக இருந்த ஹென்ரிச் கிளாசன் (10 பந்தில் 18) அதிரடியாக ஆடி நம்பிக்கை கொடுத்தார். ஆனால், யாஷ்ராஜ் புஞ்சா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

Scroll to load tweet…

83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வி உறுதியான நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் சலீல் அரோராவின் போராட்டம் அணியின் ஸ்கோரை 100 ரன்களைக் கடக்க வைத்தது. 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து ஹைதராபாத் நம்பிக்கை அளித்தபோது, நிதிஷ் குமார் ரெட்டியை (20 பந்தில் 38) ரவீந்திர ஜடேஜா பந்தில் தசுன் ஷனகா அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் பேட் கம்மின்ஸை (1) சுஷாந்த் மிஸ்ரா பந்துவீச்சில் ஆர்ச்சர் கேட்ச் பிடிக்க, ஹைதராபாத்தின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. இறுதியில், சலீல் அரோராவின் (35) போராட்டமும், ஷிவாங்க் குமாரின் (24 பந்தில் 27) ஆட்டமும் தோல்வி வித்தியாசத்தை மட்டுமே குறைத்தது.

Scroll to load tweet…

ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நான்ட்ரே பர்கர், யாஷ் ராஜ் புஞ்சா, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முன்னதாக, டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி அரைசதத்தால் நல்ல ஸ்கோரை எட்டியது. 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷிதான் ராஜஸ்தான் அணியின் டாப் ஸ்கோரர்.

Scroll to load tweet…

துருவ் ஜூரல் 21 பந்துகளில் 50 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் 29 ரன்களும், கேப்டன் ரியான் பராக் 12 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர். 15 ஓவர்களுக்குப் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணியால், கடைசி ஐந்து ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை, பிரஃபுல் ஹிங்கே 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம், கேப்டன் பேட் கம்மின்ஸ் நான்கு ஓவர்களில் 64 ரன்களை விட்டுக்கொடுத்தபோதிலும், அவரால் எந்த விக்கெட்டையும் எடுக்க முடியவில்லை.