3 நாட்களுக்குப் பிறகு உலகக் கோப்பைக்காக நிரம்பிய ரசிகர்கள் கூட்டம் – சேப்பாக்கத்தில் கரகோஷத்துடன் ரசிகர்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் மைதானம் முழுவதும் நிரம்பியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதற்கு முக்கிய காரணமாக கடுமையான வெயில். இந்திய பவுலர்களை வெயிலில் விளையாட வைக்க வேண்டும், அதன் பிறகு மாலையில், ஆஸ்திரேலியா பந்து வீசலாம் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளது.
இதற்கு முன்னதாக இதே போன்று ஒரு நிலையில், இந்திய அணியின் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் விளையாடி ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், டேவிட் வார்னர் 41 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 28 ரன்னும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். மேலும், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
India vs Australia: உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த வார்னர்!
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 1.6 ஓவர்களில் 2 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறியது. அதன் பிறகு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
India vs Australia: ஆஸிக்கு ஆப்பு வச்ச ஜடேஜா; தட்டு தடுமாறி 199 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா!
இந்த நிலையில், தான் உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்து ரசிகர்களின் வருகை போதுமான இல்லாமல் மைதானம் முழுவதுமே வெறிச்சோடி காணப்பட்டது. உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் வருகை இல்லாததைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ரசிகர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அப்படியிருந்தும் அகமதாபாத், ஹைதராபாத், தரமசாலா மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் நடந்த போட்டிகளில் ரசிகர்களின் வருகை இல்லை. இந்த நிலையில், தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலககக் கோப்பை 5ஆவது லீக் போட்டியில் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்திய அணி விக்கெட் எடுக்கும் போதும் சரி, கேட்ச் பிடிக்கும் போதும், பேட்டிங் ஆடும் போதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பியவாறு இருந்துள்ளனர்.
India vs Australia: உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த வார்னர்!
மைதானத்தில் எங்கு பார்த்தாலும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்தவாறு ரசிகர்கள் காணப்பட்டனர். ஐபிஎல் போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்படி காணப்படுமோ அதே போன்று இந்த உலகக் கோப்பையிலும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.