இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெறும் 126 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி, அந்த குறைந்த இலக்கையே எளிதாக எட்டவிடாமல் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்து வெற்றியை நெருங்கியது. எனினும் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் சொதப்பியதால் கடைசி பந்தில் தோல்வியடைந்தது.

முதல் போட்டியில் ராகுலை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. மேலும் சரியாக 5 பவுலர்களுடன் இந்திய அணி ஆடியது. எனவே கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சன் கிடைக்கும் வண்ணம், விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஒரு பேட்டிங் ஆப்சன் அதிகமாக கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் அறிமுகமான மயன்க் மார்கண்டே இந்த போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல உறுதியாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றமும் நிகழ்ந்துள்ளது. கடந்த போட்டியில் படுமோசமாக சொதப்பிய உமேஷ் யாதவிற்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த தவான் அணியில் சேர்க்கப்பட்டு ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி:

தவான், ராகுல், கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், குருணல் பாண்டியா, சாஹல், பும்ரா, கவுல்.