Asianet News TamilAsianet News Tamil

Chithira Poornami 2024 : சித்திர பௌர்ணமி அன்று சித்திரகுப்தரை ஏன் வழிபட வேண்டும்..? 

சித்திர பௌர்ணமி அன்று சித்திரகுப்தருக்கு விரதம் இருந்து வழிபட்டால் மறுமையில் நன்மைகள் மற்றும் மறு பிறவி கிடைக்கும் என்பது ஐதீகம்.

why should chitra gupta be worshiped on chithira poornami and know the benefits of worshiping chitra gupta on chithira poornami day in tamil mks
Author
First Published Apr 22, 2024, 9:35 PM IST

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பௌர்ணமி எமதர்மனின் கணக்காளரான 'சித்திரகுப்தற்கு' மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு சித்திரை பௌர்ணமி அன்றும் சித்திர குப்தரை வழிபட்டால் எம பயம் நீங்கும் மற்றும் செய்த பாவங்களை பொருத்துக் கொள்வார் என்று சொல்லுவார்கள்.

சித்ரகுப்தன் என்பவர் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளை ஆவார். இவர் பிரம்மதேவனின் உடலில் இருந்து சித்ரா பௌர்ணமி அன்று தோன்றியதால் இவருக்கு "சித்திரகுப்தன்" என்று பெயர் வந்தது. மேலும், இவர் சகல ஜீவ ராசிகளின் பாவ புண்ணியங்களுக்கு கணக்கு எழுதி அதை எமதர்மனிடம் கொடுப்பதே இவரது கடமையாகும். சித்திரகுப்தன் கொடுக்கும் இந்த பாவ புண்ணிய கணக்கின் முடிவை வைத்து தான் எமதர்மன் மக்களுக்கு தண்டனை அளிப்பார். இதனால்தான் சித்ரகுப்தரை தொழ வேண்டியது மிக மிக அவசியம் என்று சொல்லப்படுகிறது. சித்திர குப்தன் என்பதற்கு 'மறைந்துள்ள படம்' என்பது பொருள். 

சித்திர குப்தனுக்கு கோவில்:
சித்திர குப்தனுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு தனிக்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சித்திரை பௌர்ணமி அன்றும், சித்திர குப்தனுக்கும் சித்திரலேகாவுக்கும் 
திருக்கல்யாணம் நடக்கும். பிறகு இருவரும் வீதி உலா வருவார்கள்.

சித்திரை பௌர்ணமியில் சித்தர குப்தரை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்:

  • சித்திரை பௌர்ணமியில் சித்தர குப்தரை வணங்கினால் அவர் உங்கள் பாவங்களை பொருத்தருள்வார்.
  • ஒவ்வொரு சித்திர பௌர்ணமி அன்றும் சித்திரை குப்தாரை வழிபடுவதன் மூலம், இந்த உலகில் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் இடைவிடாமல் கண்காணிக்கும் ஒரு மேலான சக்தி இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
  • ஒவ்வொருவரது தோளிலும் சித்திர குப்தர் அமர்ந்திருக்கிறார் என்ற எண்ணம் வர காரணம், நாம் தினமும் நல்ல செயல்களையேச் செய்ய வேண்டும் என்று தூண்டுவதற்காகவ
  • ஆகும்.
  • சித்திர பௌர்ணமி அன்று தானம் செய்தால் இறைவனின் அருள் கிடைக்கும்.
  • குற்றால மலையில் இருந்து விழும் நதியின் பெயர் சித்திர நதியாகும். இந்நதியில் ஒவ்வொரு சித்திரை பௌர்ணமி அன்றும் புனித நீராடினால், புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.
  • அதுபோல சித்தர் பௌர்ணமி அன்று சித்திரகுப்தருக்கு விரதம் இருந்து வழிபட்டால் மறுமையில் நன்மைகள் மற்றும் மறு பிறவி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமி 2024 : திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது சொல்லலாம்..? உகந்த நேரம் என்ன..?

வழிபடும் முறை:
சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தருக்கு உரிய மந்திரத்தை முதலில் சொல்லி வழிபட ஆரம்பியுங்கள்.. பிறகு தூபம் காட்டி ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் விரதம் இருந்தால் பசுவின் பால், மோர் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்க்கக்கூடாது. நீங்கள் விரும்பினால் எருமை பால் உபயோகிக்கலாம். பாசிப்பருப்பு பாயாசம் செய்தால் எருமை பாலில் தான் செய்து நிவேதனம் செய்யுங்கள்.

நீங்கள் சித்திர பௌர்ணமி அன்றே சித்தர் குப்தனை திருப்தி செய்வதற்காக விரதம் இருந்தால் அந்நாள் முழுவதும் சித்திரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு நடத்த வேண்டும். வாசனைப் பொருட்கள் கலந்த சாதம் கலக்கப்பட்டு நிவேதனம் செய்யுங்கள். பின் பிரசாதமாக விநியோகிகள். இறுதியில் அக்னி வழிபாடு செய்ய மறக்காதீர்கள்.

இதையும் படிங்க: Chithirai Month Baby : சித்திரையில் குழந்தை பிறந்தால் வீட்டிற்கு ஆகாதா..? உண்மை என்ன..??

பூஜை முறை: பொதுவாகவே சித்திரகுப்தனை வேண்டி பெண்களே விரதம் இருப்பார்கள். விரதம் இருப்பவர்கள் காலையிலே குளித்துவிட்டு பசுவுக்கு வெள்ளம் கலந்த பச்சரிசியை வைக்க வேண்டும். பின் இவர்கள் காலையில் கோவிலுக்கு சென்று பிள்ளையார், நந்தி, சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். விரத நாளில் சித்ரகுப்தனின் புராண கதையை படிக்கலாம்.

பொதுவாகவே, சித்திரை பௌர்ணமி அன்று வீட்டில் மாக்கோலம் போட்டு, சித்திரகுப்தனை கோலமாக வரைந்து அதன் அருகில் ஏடும் எழுத்தாணியும் வைத்து, விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து, வெண்பொங்கல் வைக்க வேண்டும்.

விரதம் இருப்பவர்கள் இந்த பொங்கலுடன் கொழுக்கட்டை, மாங்காய், நீர்மோர், பழங்கள், இளநீர்,  பலகாரங்கள் போன்றவற்றை வைத்து படைத்து விரதம் முடித்து இவற்றை சாப்பிட வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios