Asianet News TamilAsianet News Tamil

மகாளய பக்‌ஷம் எப்போது? முன்னோர்களின் பூரண ஆசி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட இதுவே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

When is Mahalaya Paksha? What should be done to get the full blessings of the ancestors? Rya
Author
First Published Sep 26, 2023, 2:43 PM IST

மகாளயம் என்றால் "மொத்தமாக அல்லது கூட்டமாகவருதல்'என்று அர்த்தம். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட இதுவே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

மகாளய பக்ஷ்த்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் இதோ.

முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்

2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்

3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்

4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்

5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்

6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்

7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்

8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்

9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.

பித்ரு பக்ஷத்தின் போது தவறுதலாக கூட இதை வாங்காதீர்கள்.. முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்

10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்

11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி

12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்

13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

மகாளய பட்சம்: முன்னோர்களின் கடனை அடைக்க ஏற்ற காலம் இது..! மிஸ் பண்ணிடாதீங்க..!!

14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.

15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, இந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி பித்ரு பக்ஷம் தொடங்க உள்ளது. அக்டோபர் 14-ம் தேதி அன்று இந்த பித்ரு பக்ஷம் முடிவடைகிறது. இந்த 16 நாட்களிலும் தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்கள் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்கின்றனர். மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தில் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதால், நமக்கு மட்டுமின்றி, நம் தலைமுறைக்கும் சேர்த்து நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Follow Us:
Download App:
  • android
  • ios