விநாயகர் சதுர்த்தி நாளில் என்னவெல்லாம் செய்யலாம் மற்றும் எதெல்லாம் செய்யக் கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.

விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களில் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். முதற்கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளை தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும். மேலும் பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். வீடுகளிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில், விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலையை வைத்து வழிப்படும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எதெல்லாம் செய்யக்கூடாது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி நாளில் செய்ய வேண்டியவை:

- நீங்கள் விநாயகர் சதுர்த்தி நாளில் எந்த சிலையை வைத்து வழிபட்டாலும், கண்டிப்பாக விநாயகர் தலையில் கிரீடம் மற்றும் குடை இருக்க வேண்டும். ஒருவேளை அவை இல்லையென்றால் பலன்கள் முழுமை பெறாது. அவ்வாறு கிரீடம் மற்றும் குடை வைத்து வழிபட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பல நன்மைகள் வந்து சேரும்.

- விநாயகர் உட்கார்ந்த நிலையில் இருக்கும் சிலையை தான் வைத்து வழிபட வேண்டும்.

- விநாயகர் சிலையுடன் அவரது வாகனம் மற்றும் அவருக்கு விருப்பமான மோதகம் வழிபாட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.

- விநாயகருக்கு சிறப்பு நிற ஆடை அணிவித்து வழிபடுவது நல்லது.

- விநாயகர் சிலையானது வீட்டில் கிழக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.

- விநாயகருக்குரிய பாடலை பாடி, மணி ஓசை எழுப்பி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது வீட்டிற்கு பல நன்மைகளை கொண்டு வரும்.

விநாயகர் சதுர்த்தி நாளில் செய்யக் கூடாதவை:

- விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடும் போது அதன் தும்பிக்கையானது வலது புறம் நோக்கி இருக்க கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும். விநாயகரின் தும்பிக்கையானது இடது பக்கமும் நோக்கி தான் இருக்க வேண்டும். இதனால் வீட்டில் நன்மைகள் பெருகும்.

- விநாயகர் சிலைக்கு வெறும் கற்பூர ஆரத்தி மட்டும் எடுத்துவிட்டு பூஜை செய்யாமல் அதை ஒருபோதும் நேரில் கரைக்கக் கூடாது.

- வீட்டில் விநாயகர் சிலை வைத்த பிறகு பூண்டு வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது சாத்வீக உணவுகளை மட்டுமே சமைத்து சாப்பிட வேண்டும்.

- விநாயகர் சிலையை தனியாக வைக்க வேண்டாம். விநாயகர் சிலையுடன் லட்சுமிதேவி, சிவன், பார்வதி, முருகன் போன்ற தெய்வங்களின் சிலையுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

- வீட்டில் விநாயகர் சிலை இருந்தால் விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் அதற்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.