வரலட்சுமி விரதம் 2024 : விரதம் இருக்கும் பெண்கள் எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடலாம்?

Varalakshmi Vratham 2024 : விரத நாளில் விரதம் இருக்கும் பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

varalakshmi vratham 2024 date timings and foods for women during vratham in tamil mks

வரலட்சுமி விரதம் என்பது லட்சுமி தேவி அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவியை மனதார வேண்டிக் கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம். வரலட்சுமி பூஜை குடும்பத்தில் அமைதி நிலவவும், கணவனின் ஆயுள் நீடிக்கவும் இந்த பூஜை திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது.

2024 வரலட்சுமி விரதம் எப்போது?
இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் பெருமாளுக்கு உரிய ஏகதாசி மற்றும் துவாதசி திதிகள் சேர்ந்து வருகின்றது. அதுமட்டுமின்றி, பூராடம் நட்சத்திரமும், மூல நட்சத்திரமும் இந்நாளில் தான் வருகின்றது. அத்தனை சிறப்பு வாய்ந்த இந்த நாள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  Varalakshmi Vratham 2024: வரலட்சுமி விரதம் 2024 எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம் மற்றும் முறைகள் இதோ!

லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைக்க சரியான நேரம்:

  • 15, 2024 ஆகஸ்ட் - மாலை 6 மணி முதல் 8 மணி வரை
  • 16, 2024 ஆகஸ்ட் - காலை 6 மணி முதல் 7.20 மணி வரை

வரலட்சுமி பூஜை செய்வதற்கான சரியான நேரம்:

  • 16, 2024 ஆகஸ்ட் - காலை 9 மணி முதல் 10.20 மணி வரை. மாலை 6 மணிக்கு மேல்

புனர்பூஜை செய்வதற்கான சரியான நேரம்:

  • 17, 2024 ஆகஸ்ட் - காலை 7:35 மணி முதல் 8.55 மணி வரை. காலை 10.35 மணி முதல் 12 மணி வரை
  • 18, 2024 ஆகஸ்ட் - காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை. காலை 10:45 முதல் 11:45 மணி வரை

இதையும் படிங்க:   Varalakshmi Recipes : லட்சுமி தேவியின் விருப்பமான உணவான முறுக்கு வடை மற்றும் பல இங்கே...

வரலட்சுமி விரதம்:
வரலட்சுமி விரத நாளில் திருமணமான பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜைக்கான வேலைகளை செய்ய தொடங்குவார்கள். இந்த நாளில் அவர்கள் விரதம் இருக்கும் போது, அவர்களுக்கு நிறைய ஆற்றல் தேவை. எனவே, அவர்கள் இந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

1. வாழைப்பழம்:
வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மேலும் இதில் இயற்கையாகவே குளுக்கோஸ் உள்ளது. இவை உடலுக்கு ஆற்றலை வழங்கும். இதை நீங்கள் பலமாக அப்படியே சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்திகள் செய்து சாப்பிடலாம். ஒரு வாழைப்பழம் விட்டால் உடலுக்கு தேவையான ஆற்றலை முழுமையாக வழங்குகிறது மற்றும் உங்களை நாள் முழுவதும் நன்றாக வைத்திருக்கும்.

2. பால்:
 வரலட்சுமி விரத நாளில் பால் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், பாலில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. விரத நாளில் ஒரு கிளாஸ் பால் குடித்தால் வரலட்சுமி பூஜை நாளில் செய்வதற்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

3. பழச்சாறுகள்:
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் பல சாறு குடிக்கலாம். இது ஊட்டச்சத்துக்களின் ஆதாரம் என்பதால் இதை நீங்கள் விரதம் இருக்கும் நாளில் குடிக்கலாம். இதற்கு நீங்கள் பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்களை ஜூஸாக செய்து குடிக்கலாம். இது ஆற்றலை தருவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது.

4. நட்ஸ்கள்:
நட்ஸ்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனே வழங்குகிறது. நட்ஸ்களில் பாதம் ரொம்பவே நல்லது. ஏனெனில், இதில் வைட்டமின் ஈ மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை முழுமையாக வழங்கும். இதற்கு நீங்கள் இரவில் தண்ணீர் ஊற வைத்து, பிறகு விரதம் இருக்கும் நாளில் காலையில் சாப்பிடுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios