Asianet News TamilAsianet News Tamil

வரலட்சுமி விரதம் 2024 : வீட்டில் இப்படி பூஜை செய்ங்க.. சுமங்கலி பாக்கியம் கிட்டும்!

Varalakshmi Vratam 2024 : வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை மற்றும் விரதம் விதிகள், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

varalakshmi vratam 2024 do you know its procedure and fasting rules in tamil mks
Author
First Published Aug 13, 2024, 9:10 AM IST | Last Updated Aug 13, 2024, 9:21 AM IST

வரலட்சுமி விரதம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுமங்கலி பெண்களால் மகாலட்சுமிக்கு செய்யும் சிறப்பான வழிபாட்டு பூஜை தான் இந்த வரலட்சுமி விரதம் ஆகும். 

உலகில் உள்ள அனைத்து அலகுகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்து உருவாக்கிய ஒரு அடையாளம் தான் மகாலட்சுமி என்று சொல்லப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் அவர்களது குடும்பம் தலைத்தோங்கும் மற்றும் கணவனின் ஆயுள் நீடிக்கும். கன்னிப்பெண்கள் கடைபிடித்தால் அவர்களுக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். எனவே, இன்றைய தொகுப்பில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறை மற்றும் விரதம் விதிகள், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு விரைவாகப் பார்க்கலாம். 

இதையும் படிங்க:  வரலட்சுமி விரதம் 2024 : விரதம் இருக்கும் பெண்கள் எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடலாம்?

2024 வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை:

இதற்கு வீடு/அலுவலகத்தில் தென்கிழக்கு மூலையில் ஒரு சின்ன மண்டபம் கட்ட வேண்டும். அதில் சந்தனத்தால் அம்மனை செய்ய வேண்டும். நீங்கள் வசதி படைத்தவர்கள் என்றால் வெள்ளி சிலை வைத்து அம்மனை வழிபடலாம். அம்மனை தாழம்பூவால் அலங்கரித்து ஒரு பலகையின் மீது வையுங்கள். பிறகு சிலையின் முன் ஒரு வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசி பரப்பவும். மேலும் மாவிலை, தேங்காய், எழுமிச்சை, பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை உடுத்த வேண்டும். இப்போது ஒரு கும்பத்தை எடுத்து அதில் தூய்மையான நீர் நிரப்பி, மாவிலையுடன் தேங்காயை அரிசியின் நடுவில் வைக்கவும். பிறகு ஐந்து வகையான ஆரத்தி தட்டு வைத்து பூஜை செய்யுங்கள்.  கும்பு பூஜைக்கு பிறகு பிள்ளையாருக்கு அருகம்புல் தூவி பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையின் போது லட்சுமி தேவியின் நாமங்கள், அஷ்டலட்சுமி நாமங்கள், கனகதார நாமங்கள் ஆகியவற்றை படிக்க வேண்டும்.

வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டில் வந்து இருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். நெய்வேத்தியமாக கொழுக்கட்டை படைக்க வேண்டும். பிறகு மறுநாள் ஆறு அல்லது குளங்களில் சந்தனத்தால் செய்யப்பட்ட அம்மனின் சிலையை கரைத்து விடுங்கள்.

இதையும் படிங்க:  Varalakshmi Vratham 2024: வரலட்சுமி விரதம் 2024 எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம் மற்றும் முறைகள் இதோ!

வரலட்சுமி விரதம் இருக்கும் முறை:

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அதிகாலையிலேயே நீராடி, பிறகு வீட்டை நன்கு சுத்தம் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி, வீட்டில் முன் கோலங்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு வரலட்சுமி பூஜை முறையை மேலே சொன்னபடி முறையாக பின்பற்ற வேண்டும். வரலட்சுமி பூஜை முடியும் வரை பெண்கள் விரதம் இருக்க வேண்டும். 

வரலட்சுமி விரதத்தின் பலன்கள்:

வரலட்சுமி விரதம் இருந்தால் நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம், செல்வம் போன்றவை கிடைக்கும். அதுபோல, வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தொழில் முடக்கம், பண பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முக்கியமாக மன அமைதி மட்டுமின்றி, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குறிப்பாக பரதந வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். வரலட்சுமி விரதம் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு நல்ல திருமணம் வாழ்க்கை அமையும். முக்கியமாக, வரலட்சுமி பூஜையின் போது சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios