நாளை புரட்டாசி சனிக்கிழமை.. சனிபகவானின் பாதிப்பில் இருந்து தப்ப என்ன செய்ய வேண்டும்?

இந்த சனிக்கிழமையில் சனி பகவானின் பாதிப்பில் இருந்த தப்ப என்ன செய்ய வேண்டும் எண்று பார்க்கலாம்.

Tomorrow is Puratasi Saturday.. What should be done to escape from the influence of Sani Bhagavan? Rya

தமிழ் மாதங்களில் ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். செப்டம்பர் மத்தியில் இருந்து அக்டோபர் மத்தி வரை புரட்டாசி மாதம் இருக்கும்.  அந்த வகையில் கடந்த 18-ம் தேதி புரட்டாசி மாதம் பிறந்தது. நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆகும். இந்த சனிக்கிழமையில் சனி பகவானின் பாதிப்பில் இருந்த தப்ப என்ன செய்ய வேண்டும் எண்று பார்க்கலாம்.

புரட்டாசி விரதம் இருக்கும் நபர்களை சனி பகவான் தொல்லை செய்வதில்லை என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமையில் சிவன் கோயில்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும்.. புரட்டாசி மாதம் புனிதமான மாதமாக கருதப்படுவதால், இந்த மாதத்தில் விரதம் புண்ணியம் அதிகம் கிடைக்கும். எனவே புரட்டாசி சனிக்கிழமை யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது. ஆனால் தான தர்மங்கள் நிறைய செய்யலாம். புரட்டாசி சனிக்கிழமை அன்று காகத்திற்கு எள்ளும், வெல்லமும் கலந்த சாதம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி ஆகிய காலத்தில் சனியின் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே சனி பாதிப்பு நீங்க, சனி ஹோரையில் நல்லெண்ணை ஏற்றி வழிபடுவார்கள். சனி பகவான் அனைவருக்குமே தொந்தரவு கொடுப்பதில்லை. நேர்மையானவர்களுக்கு சில சோதனைகளை கொடுத்தாலும் பிறகு நன்மை புரிவார். எனவே புரட்டாசி சனிக்கிழமை அன்று எள்சாதம் வைத்து சனி பகவானை வழிபட்டால் சனி பாதிப்பு நீங்கும்.

அனைத்து வகையான தோஷங்களையும் போக்குவது பிரதோஷம். பிரதோஷ விரதம் இருப்பவர்களையும் சனி பகவான தொந்தரவு செய்யமாட்டார். காகத்திற்கு சாதம் வைப்பவர்கள், புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் பித்ரு கடன் செய்பவர்கள் ஆகியோரும் சனி பகவானின் தாக்குதலில் இருந்து விடுபடலாம். தங்கள் இடத்தை சுத்தமாகவு, சுகாதாரமாகவும் வைத்திருப்பவர்களை மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடிக்கும். அவர்களை சனிபகவான் பாதிப்பதில்லை. அதே போல் மகாலக்ஷ்மி இருக்கும் இடத்தை சனி பகவான் திரும்பி கூட பார்ப்பதில்லை. ராம நாமத்தை உச்சரிப்பவர்களையும், சிவபெருமானின் நமசிவாய நாமத்தை உச்சரிப்பவர்களையும் சனி பகவான் பாதிப்பதில்லை. தினமும் சிவ பூஜை செய்யும் நபர்களும் சனி பகவானின் பாதிப்பில் இருந்து தப்பலாம். எனவே சனி பகவானின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நபர்கள், மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் சனியின் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios