Vishnu Sayana Ekadasi: கடன் பிரச்சினை தீராத நோய் தீர்க்கும் விஷ்ணு சயன ஏகாதசி அன்னதானம் செய்தால் என்ன பலன்?
ஏகாதசியில் பெருமாளை வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி விஷ்ணு சயன ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. ஏகாதசி தினத்தில் அன்னதானம் செய்வது மகத்தான பலன்களைப் பெற்றுத் தரும். இதனால் உங்கள் வேண்டுதல்களை நிவர்த்தி செய்து அருளுவார் வேங்கடாசலபதி கடவுள்.
பெருமாளுக்கு உகந்த புதன்கிழமையான இன்றைய தினம் ஏகாதசி திதியும் இணைந்து வருவது சிறப்பு. ஏகாதசி என்பது பெருமாள் பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ள விரத தினமாகும். மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு கூறப்பட்டுள்ளது. விஷ்ணு சயன ஏகாதசி தினத்தன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதம் என நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவுக்கு படையலிட்டு வழிபடுவது சிறப்பு.
பல்லி உங்கள் மேல் எந்த இடத்தில் விழுந்தால் அதிஷ்டம் கிடைக்கும் தெரியுமா..?
ஆடி மாதத்தில் அம்மனின் அருள் பரிபூரணமாக விளங்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்களை முழுமையாக நிறைவேற்றி குறைகளைத் தீர்த்து வைக்கிறாள் அம்பிகை. ஆடி மாதத்தில் அம்பிகை மட்டுமின்றி, மகாவிஷ்ணுவும் வழிபடும் தமது பக்தர்களின் பிரார்த்தனைகளை கேட்டு அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றித் தருகிறார்.
இன்றைய தினம் பூஜை அறையில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, துளசி மாலை சாத்துங்கள். பூஜையின்போது விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிக நல்லது. விஷ்ணு சகஸ்ர நாமத்தை வீட்டில் ஒலிக்கவிட்டு பெருமாளை வழிபடலாம். இன்று பெருமாளை துளசி கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு. புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம். இன்றைய தினம் அன்னதானம் செய்தால் கடன், நோய் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.
Palani Murugan Navapashanam Silai: போகர் உருவாக்கிய பழனி தண்டாயுதபாணி; நவபாஷண சிலைக்கு இத்தனை சிறப்புக்களா?
ஏகாதசி திதியில் மகாவிஷ்ணு வழிபாட்டுக்குப் பின்னர், குறைந்தது ஐந்து பேருக்காவது உணவு வழங்குங்கள். இதனால் வீட்டில் தனம், தானியம் பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். கடன் தொல்லைகளில் இருந்து மீளலாம். நல்ல வேலை கிடைக்கும். இன்றைய தினம் விஷ்ணு சயன ஏகாதசி நாளை சுக்ல பட்ச துவாதசி தினமாகும். இந்த இரண்டு நாட்களுமே மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால், நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொட்டதெல்லாம் துலங்கும்.
ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, துவாதசி என்றில்லாமல் பொதுவாக, மாதந்தோறும் வரும் ஏகாதசி, துவாதசியில் பெருமாள் வழிபாடு செய்வதும், ஏகாதசி நாளில் அன்னதானம் செய்வதால் பல தலைமுறைக்கும் குறைவில்லாத செல்வம் பெருகும்.
- Ashadi Ekadashi
- Chaturmas
- Chaturmas Vrata
- Devshayani Ekadashi
- Ekadashi fasting
- Ekadashi significance
- Hari Sayana Ekadashi
- Lord Vishnu
- Padma Ekadashi
- Pandharpur Yatra
- Shayani Ekadashi
- Vaikuntha
- Vishnu Sayana Ekadasi
- Vishnu sleeping
- aadi matha ekadasi
- aanmeegam
- ekadasi
- ekadasi fasting rules in tamil
- spirituality
- tamil spirituality news
- what is ekadasi