Asianet News TamilAsianet News Tamil

Palani Murugan Navapashanam Silai: போகர் உருவாக்கிய பழனி தண்டாயுதபாணி; நவபாஷண சிலைக்கு இத்தனை சிறப்புக்களா?

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர் இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த சிலையின் சிறப்புகள் என்ன?  திரை பிரபலங்கள் பலரும் இந்த ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்வதன் காரணம் என்ன என்று பார்க்கலாம்.

Palani Murugan temple speciality and secrets about Navapashanam statue
Author
First Published Jul 13, 2024, 10:47 AM IST | Last Updated Jul 13, 2024, 10:47 AM IST

Palani Murugan Navapashanam statue:
முருகப்பெருமான் மாம்பழத்திற்காக பெற்றோர்களிடம் கோபித்துக்கொண்டு வந்து பழனி மலையில் ஆண்டி கோலத்தில் அமர்ந்தார் என புராணங்கள் சொல்கின்றன.  மலைமேல் உள்ள தண்டாயுதபாணி  மூலவர் நவபாஷனத்தினால் உருவாக்கப்பட்டவர். இதனை பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற சித்தர். பல்வேறு நோய்களை நீக்கும் தன்மை கொண்டது இந்த நவபாஷண சிலை. எனவேதான் அபிஷேக பஞ்சாமிர்தம் நோய் நீக்கியாக உள்ளது.

பாத விநாயகர்
பழனி மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். மலைக்கோயில் அடிவாரத்தில் பாதவிநாயகர் இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது.

Aadi Month 2024 Tamil: சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி மாத புராண கதை.. ஆடியில் இத்தனை சிறப்புகளா?

இடும்பனை ஆட்கொண்ட முருகன்:
இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். இடும்பனை ஆட்கொண்டார் முருகன்.

போகரின் சமாதி
சித்தர் போகர்

மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில் இவரே பிரபலமாகிவிட்டார். சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.

போகர் வடிவமைத்த நவபாஷாண சிலை
இந்த சிலையை போகர் செய்த 9 ஆண்டுகள் ஆனதாம். அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று சேகரித்து  கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாம்.

Aadi Velli 2024: சக்தி தரும் அம்மன் பாலபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும்! மாங்கல்ய பலம் கூடும்!!


விபூதி அபிஷேகம்:
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

தீர்த்த பிரசாதம்:
தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

நடிகை சமந்தா தரிசனம்: நடிகை சமந்தா சமீபத்தில் பழனி வந்து முருகனை தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றுள்ளாராம். பிரபலங்கள், பணபலம் படைத்தவர்களுக்கு மட்டுமே இந்த பிரசாதம் கிடைக்கும். தனக்கு இருந்த நோய் நீங்குவதற்காக நடிகை சமந்தா பழனிக்கு வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்து இந்த பிரசாதத்தை பெற்று சென்றிருக்கிறார் என தற்போது தகவல் பரவி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios