இன்று சோமவார பிரதோஷம்.. அனைத்து தோஷங்களையும் நீக்கும் சிவ வழிபாடு.. கோயிலுக்கு செல்ல உகந்த நேரம் எது?

சிவனின் மாதம் என்று நம்பப்படும் இந்த மாதத்தில், சிவ பக்தர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் (சோமவாரம்) விரதம் கடைப்பிடிக்கிறார்கள்.

Today is Somavara Pradosha.. Shiva worship which removes all evils.. What is the best time to go to the temple rya

ஷ்ரவன் என்றும் அழைக்கப்படும் சாவன் என்பத் இந்து காலண்டரில் ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். இந்து சந்திர நாட்காட்டியின் ஐந்தாவது மாதமாகும். பொதுவாக சாவன் மாதம் இந்துக்களுக்கு, குறிப்பாக சிவ பக்தர்களுக்கு பெரும் சமய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. சிவனின் மாதம் என்று நம்பப்படும் இந்த மாதத்தில், சிவ பக்தர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் (சோமவாரம்) விரதம் கடைப்பிடிக்கிறார்கள்.

இந்த ஆண்டு, சாவன் மாதம் ஜூலை 4, 2023 இல் தொடங்கி ஆகஸ்ட் 31, 2023 அன்று முடிவடைகிறது. வெற்றி, திருமணம் மற்றும் செல்வத்திற்காக சிவபெருமானை வழிபடும் புனிதமான மாதம் என்று நம்பப்படுகிறது. சாவன் மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பக்தர்கள் விரதம் கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில் சாவன் மாதத்தில் கடைசி சோமவார விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனால் சிவ பெருமான் கோயில்களில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

இன்று பிரதோஷ விரதமும் சேர்ந்து வருகிறது. பிரதோஷமும் சிவபூஜைக்கு உரிய மிகவும் சக்தி வாய்ந்த பூஜை என்று அறியப்படுகிறது. எனவே இன்று பிரதோஷ காலம் என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான வேளையில், சிவாலயங்களுக்குச் சென்று, சிவ பெருமானை தரிசிப்பதும் பூஜிப்பதும் பிரார்த்தனை பாவங்களைப் போக்கவல்லது, புண்ணியங்களைப் பெருக்கக் கூடியது என்பது ஐதீகம்.

சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோம வாரம் திங்கட்கிழமை, தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் சிவபெருமான. அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞான நூல்கள்.

நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும். நன்மையெல்லாம் பெருகும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வ தாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையும் விசேஷம். பிரதோஷமும் மிகப்பெரிய புண்ணியம். இந்த இரண்டும் சேர்ந்து வருவது, இன்னும் இன்னுமான சந்தோஷங்களையும் சத்விஷயங்களையும் நமக்குத் தந்தருளும் என்பது சத்தியவாக்கு. சோம வாரப் பிரதோஷத்தன்று மறக்காமல், மாலை வேளையில் சிவாலயம் சென்று,. அப்போது நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசிக்க வேண்டும். முடிந்தால், நந்திதேவருக்கு செவ்வரளியும் அருகம்புல் மாலையும் வழங்குங்கள். பன்னீர், சந்தனம், அரிசிமாவு, விபூதி, பால், தயிர் என உங்களுக்குப் பிடித்தமான அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். அதேபோல், சிவனாருக்கு ஒரு கைப்பிடி அளவேனும் வில்வம் சார்த்துங்கள். 

இன்னும் முடியுமெனில், எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகம் பண்ணுங்கள். முன்னேறுவதற்குத் தடையாக உள்ள சகலத்தையும் தகர்த்து அருள்வார் சிவனார். அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழிவகைகள் செய்வார் ஈசன். மேலும் சிவ பெருமான் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து நம்மை ஆனந்தமாக வாழச் செய்வார் தென்னாடுடைய சிவனார் என்பது நம்பிக்கை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios