விஜயதசமி 2022 : கொலு, கலசத்தை எப்போது எப்படி எடுத்துவைக்கலாம்.. உரிய நேரமும் வழிபாட்டு முறைகளும்!

கொலுவை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். இத்தனை நாளாய் வீட்டை அலங்கரித்த கொலு நாளை முதல் வெறிச்சோடி இருக்கும்.  10 நாட்கள் வீட்டை அலங்கரித்த கொலுவை முடிவுக்கு கொண்டு வரும் போது மனமே இருக்காது.  ஆனால் தினசரி வழிபாட்டு முறை சாத்தியமில்லாதது என்பதாலேயே நவராத்திரி என்பது 10 நாட்களுக்கு மட்டுமே கொண்டாடும் விழாவாக வைத்திருந்தார்கள். 
 

tips of worships and  remove golu dolls

கொலு என்பது மாநிலத்துக்கேற்ப மாறுபடும்.  பெண்களுக்கு ஆத்ம திருப்தியை உண்டு செய்யும் வழிபாடாக நவராத்திரி விளங்குகிறது என்பதை மறுக்க முடியாது. 

கொலு வைக்க முடியாதவர்கள் கூட வீட்டினுள் அகண்ட தீபம் ஏற்றி அம்பாளை மனம் நிறைய வழிபட்டால் சிறப்பான பெறுவார்கள். கோலாகலமாய் நிறைவடைந்தது நவராத்திரி.  இன்றோடு கொலு கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றது.

இந்நிலையில் கொலுவை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். இத்தனை நாளாய் வீட்டை அலங்கரித்த கொலு நாளை முதல் வெறிச்சோடி இருக்கும்.  10 நாட்கள் வீட்டை அலங்கரித்த கொலுவை முடிவுக்கு கொண்டு வரும் போது மனமே இருக்காது.  ஆனால் தினசரி வழிபாட்டு முறை சாத்தியமில்லாதது என்பதாலேயே நவராத்திரி என்பது 10 நாட்களுக்கு மட்டுமே கொண்டாடும் விழாவாக வைத்திருந்தார்கள். 

நவராத்திரி இப்படித்தான் உருவானதாம்.. தெரிஞ்சுக்கங்க!

விஜயதசமி

விஜயதசமி வழிபாட்டுக்குரிய நேரம்  தனியாக உண்டு என்றாலும் ஒவ்வொருவரும் தனித்தனி நேரத்தில் வழிபாடு செய்வார்கள். அதனால் ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர்த்து நீங்கள் வணங்க வேண்டிய  நேரம் என்றால் 

காலை 6 மணி முதல் 7.20 மணி வரை
காலை 9.15 முதல் 11.45 மணி வரை

(விஜயதசமி குழந்தை  சேர்க்கை வித்யாரம்பத்தையும் செய்யலாம்.  )

அல்லது

மதியம் 1.30 மணிக்கு மேல் மாலை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம்.

நவராத்திரி ஸ்பெஷல் - அம்மன் அருள்பெற இந்த ஸ்லோகம் சொல்லுங்கள்!!

மதியத்தில் இலை போட்டு வழிபாடு செய்பவர்கள் 1.30 மணிக்கு செய்யலாம். மாலை நேரமும் பயன்படுத்தி கொள்லலாம்.  இந்த நாளில் புதிய தொழில் தொடங்கலாம்.  தொட்டது துலங்கும் நாள் இது.  ஆடை ஆபரணங்கள் வாங்கவும் உரிய நேரம் இது. 

tips of worships and  remove golu dolls

கொலு நிறைவு செய்யும் முறை

கொலு கொண்டாட்டத்தை தொடங்கியது போன்றே கொலுவை நிறைவு செய்வதும் முக்கியமானது.  நாளை ஒருநாள் நீங்கள் கொலுவை அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள்  வியாழக்கிழமை அப்போது கொலு படிக்கட்டுகளையும் கொலு பொம்மைகளையும் சிறிது சிறிதாக நகர்த்தி பத்திரமாக எடுத்துவைக்கலாம்.  அன்று ஏதாவது வேறு வேலை இருந்தால் மறுநாள் வெள்ளிக்கிழமை  எடுக்க கூடாது. வியாழக்கிழமை  சிறிது பொம்மையை எடுத்து நகர்த்தி வைத்துவிட்டு எடுத்து வைக்கலாம். 

Navartri : நவராத்திரி - ஒவ்வொரு நாளின் சிறப்பு என்ன தெரியுமா?

ஒவ்வொரு கொலு பொம்மையையும் சுத்தம் செய்து நன்றாக பேப்பரில் சுற்றி அதன் மேல் பபுள் பேப்பர் போட்டு உடையாமல் அட்டைப்பெட்டியில் வைக்கோல் போட்டு அடுக்கி வைக்கலாம். இந்த பொம்மைகளை எடுத்துவைப்பதற்கே ஒரு வாரம் ஆகலாம். அதனால் புதன் கிழமை விட்டு வியாழக்கிழமை அன்று இதை எடுக்கலாம். 

கொலுவை பிரிக்கும் போது...

அம்பாளை பிரார்த்தனை செய்து  இந்த வருடம் போன்று அடுத்த வருடமும் நாங்கள் மகிழ்ச்சியாக கொலு வைக்க வேண்டும். அதற்கான வல்லமை தர வேண்டும் என்று அம்பாளை நினைத்து வேண்டி நெய்வேத்யம் செய்து கொலுவை பிரிக்க வேண்டும்.  

Navratri : தமிழகத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

கலசம் பிரிக்கும் முறை

தண்ணீர் வைத்து கலசம் வைத்திருப்பவர்கள் வீடு முழுக்க தண்ணீர் தெளியுங்கள். அதில் இருக்கும் பொருள்களை பூஜையறை குப்பையில் சேர்க்கலாம். தேங்காயை உடைத்து  நீங்கள் பயன்படுத்தலாம். தண்ணீர் மீது தேங்காய் வைத்து இருந்தால்  அவை அழுக வாய்ப்புண்டு. அதனால் தேங்காயை உடைத்து தவறு ஏதேனும் செய்துவிட்டோமோ என்று நினைக்க வேண்டாம் அந்த தேங்காயை  உடைக்காமல் அப்படியே தானமாக கொடுத்துவிடாலாம்.  

கலசத்தில் அரிசி வைத்திருந்தால் அதை எடுத்து பொங்கல் நெய்வேத்யம் செய்து அதை பிரசாதமாக கொடுக்க வேண்டும். அதன் பிறகு அடுத்த ஆண்டு கலசம் வைக்க வேண்டும்  என்று வேண்டிக்கலாம். இதை வியாழக்கிழமை அன்று செய்யுங்கள். தவறும் போது சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை செய்யலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios