நவக்கிரகங்களை எப்படி வலம் வந்தால் பலன் கிடைக்கும் தெரியுமா?
நவகிரகங்களை சுற்றி வருவதில் பலருக்கு பல குழப்பங்கள் இருப்பது உண்டு. சிலர் ஒரு முறை சுற்றுவார்கள், ஒரு சிலர் மூன்று முறையும், சிலர் ஒன்பது முறை என இப்படி பலரும் பல விதமாக சுற்றி வருகின்றனர். நவகிரகத்தை முறையாக எத்தனை முறை சுற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனின் வாழ்வை நவகிரகங்கள் தான் தீர்மானிக்கிறது. நன்மைகள் மற்றும் தீமைகள் என்பது இந்த நவகிரகங்களின் அமைப்பால் தான் நடக்கின்றன. ஒருவர் போன பிறவியில் செய்த நற்செயல்கள் தான் இந்த பிறவியிலும் நன்மைகளாக அமைகிறது. அதேபோன்று போன பிறவியில் செய்த தீமைகள் தான் இந்த பிறவியில் தோஷங்களாக வருகிறது என்பதை கேள்விபட்டிருக்கிறோம்.
நவகிரகங்கள் தோன்றிய காலகட்டத்திலேயே நவதானியங்களும் தோன்றியது. நாம் நவகிரகங்களை நவதானியங்களை வைத்து தான் சாந்தப்படுத்துகிறோம். நவகிரகங்களால் தான் நமது உடலும் ஆளப்படுகின்றன. அவ்வாறு ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு கிரகமும் தங்களின் சேவையை செய்து வருகிறது. அந்த அடிப்படையில் நம் வாழ்க்கையின் பாதைக்கு ஏற்றவாறு நம்மை நல்ல முறையில் வழி நடத்தி செல்ல நவகிரக நாயகர்கள் உதவிபுரிகின்றனர்.
அப்படி உதவும் நவகிரகங்களை சுற்றி வருவதில் பலருக்கு பல குழப்பங்கள் இருப்பது உண்டு. சிலர் ஒரு முறை சுற்றுவார்கள், ஒரு சிலர் மூன்று முறையும், சிலர் ஒன்பது முறை என இப்படி பலரும் பல விதமாக சுற்றி வருகின்றனர். நவகிரகத்தை முறையாக எத்தனை முறை சுற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நவகிரகங்களை மொத்தம் ஒன்பது முறை சுற்றி வந்திட வேண்டும். அதில் ஏழு சுற்றுகள் வலப்புறமாகவும், இரண்டு சுற்றுகள் இடப்புறமாகவும் சுற்றி வர வேண்டும். ஏனென்றால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றி வருபவை. அதனால், இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்றி வர வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றி வருபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.
ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் ஒரு முறை மட்டுமே சுற்றினால் போதும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்கள் “ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ” என்ற மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு ஒரு முறை வலம் வரலாம்.
திருப்பதி சென்றால் திருப்பம் வருவது உண்மையா?
அதே நேரம் சில பண்டிதர்கள் நவக்கிரங்களை வலம் இடம் என்று கருத்தில்கொள்ள வேண்டியதில்லை. ஒன்பது முறை சுற்றினால் போதும் என்றும் சொல்வதுண்டு. நவகிரகங்களை வலம் வருவதற்கு முன்பு கோயிலில் எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு இறுதியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். அதோடு நவகிரகங்களை கையால் தொட்டு வணங்க கூடாது.
வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருள்கள்..!
ஏன் இந்த நவகிரகங்கள் மட்டும் முக்கியமானதாக இருக்கின்றன என்றால்.. மனித சரீரம் என்ற தேசத்திற்கு சகலோக நாயகரான பரம்பொருள் தான் தலைவர் என்றாலும், அந்த சரீரத்திலுள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு கிரகத்தை அதிகாரியாக நியமித்து உள்ளார். அப்படி அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும் கிரகங்கள் அந்தந்த மனிதன் முன் ஜென்மங்களில் செய்த வினையை வைத்து தான் அதற்கு தகுந்த பலன்களை தத்தம் தசாபுத்திகள் நடந்திடும் போது கொடுத்து வருகின்றனர்.
அதனால் தான் நவகிரகங்களை வேண்டுவதுடன் எப்படி வேண்ட வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.