Asianet News TamilAsianet News Tamil

மாசாணியம்மன் கோவில் தீமிதி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் "மாசாணி தாயே போற்றி" என்ற கோஷத்துடன் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

thousands of devotees participated maasaniamman theemidhi festival in coimbatore
Author
First Published Feb 6, 2023, 2:19 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 85 அடி மூங்கில் கொடி கம்பம் ராஜகோபுரம் அருகே நடப்பட்டு, மயான பூஜை ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் கடந்த மூன்றாம் தேதி நடுநிசியில் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை 7.20 தொடங்கியது இதில் 47 அடி நீலமும் 11 அடி அகலம்  கொண்ட குண்டத்துக்கு கோவில் பூசாரிகள் பூஜைகள் செய்யப்பட்டு முதலில் குண்டத்தில் பூ பந்து எலுமிச்சம் பழத்தை உருட்டி விட்டனர்.

பின்னர் கோவில் பூசாரிகள் ஒவ்வொருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து வந்த பக்தர்கள் "மாசாணி தாயே போற்றி "என்ற கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  குண்டத்தில் இறங்கி தங்கள் நேத்தி கடனை செலுத்தி வருகின்றனர் இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு சில காவல் துறையினரும் குண்டத்தில் இறங்கினர் பிரசித்தி பெற்ற இந்த  குண்டத்தைக் காண பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள் இங்கு வருகை புரிந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios