திருவண்னாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா : துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது..
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் காவல் தெய்வமான அருள்மிகு துர்க்கையம்மனுக்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது,
அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார், கார்த்திகை தீப திருவிழா வான வேடிக்கையுடன் கோலாகலமாக தொடங்கியது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனை வழிபட்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நினைத்தாலே முக்திதரும் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்குகிறது, அதனை தொடர்ந்து காலையிலும் இரவிலும் 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் திருக்கோயிலின் நான்கு மாட விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவண்ணாமலை அருணச்சலேஸ்வரர் கோவிலில் வருகிற 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்க உள்ளது. வரு 26 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
சாஸ்திரப்படி எல்லோருடைய பாதங்களையும் தொட்டு ஆசி பெறுவது நல்லதா? உண்மை என்ன?
இதற்கு முன்னதாக இன்று திருவண்ணாமலை நகரின் சின்னகடை வீதியில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோவிலில் காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தீப ஆரதனை நடைபெற்றது, அதனை தொடர்ந்து துர்க்கையம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காமதேனு வாகனத்தில் எழுந்தருளி, அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.