Asianet News TamilAsianet News Tamil

சமயபுரம் மாரியம்மன் ஆலய தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கோ பூஜையும் நடைபெற்றது.

thaipusam festival started with flagging event today at samayapuram temple in trichy vel
Author
First Published Jan 17, 2024, 2:57 PM IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நடைபெற்றது. மேலும் 11 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் பின்பு எழுந்தருளுளினார். இதனையடுத்து கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

தைப்பூச திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷம்  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

பெற்ற மகனை வெட்டி கொன்ற தந்தை; மதுபோதையில் நிகழ்ந்த கொலை சம்பவம்

10ம் நாள் கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது இதனை தொடர்ந்து இரவு 10மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் உழவர் திருநாளான மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைப்பெற்றது.

ஜல்லிக்கட்டு சர்வதேச விளையாட்டாக அங்கீகாரம் பெறவேண்டும்; இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் விருப்பம்

தொடர்ந்து  பூஜைகள் நடைபெற்று மகா தீபாதாரனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோபூஜை நடைபெற்றது. பின்னர் மரக் கேடயத்தில் அம்மன் எழுந்தருளி கோயில் உள் பிரகாரம்,தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்த்த்களுக்கு காட்சியளித்தார்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள்,கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios