Pongal 2023: பொங்கல் அன்று எள்ளு தண்ணீரில் குளிக்க வேண்டும் ஏன்? எதற்காக?
Pongal 2023: பொங்கல் பண்டிகை அன்று எள்ளு தண்ணீரில் குளிப்பதற்கான காரணம் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
பண்டிகை என்றாலே அதிகாலை எழுந்து குளிப்பது வழக்கம். அதிலும் சூரிய பகவானை வணங்கும் பொங்கல் பண்டிகையில் அதிகாலையில் குளிப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் வலியுறுத்துவார்கள். இந்து சாஸ்திரத்தின்படி தினமும் காலையில் 6 முதல் 8 மணிக்குள்ளாக குளிக்க வேண்டும். மாலை நேரத்தில் குளிப்பதைவிட காலையில் இந்த நேரத்தில் குளிப்பதுதான் நல்லது. அதிலும் பொங்கல் அன்று அதிகாலையில் எள்ளு தண்ணீரில் குளித்தால் அதிகமான பலன் கிடைக்கும்.
பொங்கல் அன்று குளிக்கும்போது அந்த தண்ணீரில் எள்ளை ஊற வைக்க வேண்டும். அதிக நேரம் கூட வேண்டாம்; ஐந்து நிமிடங்கள் போதும். அந்த எள்ளு நீரில் குளிப்பதால் புண்ணியம் கிடைக்கும் என்பது இந்து மதத்தில் ஐதீகம். இதை செய்வதால் நோய்களில் இருந்தும் விடுபடலாம்.
பொங்கல் அன்று நீராடிய பிறகு கொஞ்சம் எள்ளை தண்ணீரில் கலந்து சூரிய பகவானுக்கு படைக்கவும். இது சிந்தனையை மேம்படுத்தவும், லட்சியத்தை நோக்கி பயணிக்கவும் உதவுகிறது. பொங்கல் அன்று எள்ளையும், போர்வை, கம்பளி ஆடைகளை தானமாக வழங்கினால் தோஷங்களில் இருந்து விடுபடலாம். செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.
இதையும் படிங்க: Pongal wishes 2023: பொங்கல் போலவே இன்பம் பொங்கட்டும்... உங்களுக்கான பொங்கல், போகி பண்டிகை வாழ்த்துகள் இதோ...
குண்டலினியில் சூரியன் வலுவிழந்திருந்தால் பொங்கல் அன்று வீட்டில் சூரிய எந்திரத்தை வைத்து 501 முறை சூரிய மந்திரத்தை உச்சரியுங்கள். இந்த நாளில் சூரிய பகவானின் அருளும் ஆசியும் கிடைக்க வெல்லம், பால், பச்சை அரிசி ஆகியவை கலந்து தயாரித்த சாதத்தை ஆற்றங்கரையில் படைக்க வேண்டும். குண்டலினியில் சூரிய பகவான் வலு இழப்பதால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை தவிர்க்க ஒரு செப்பு நாணயம் அல்லது ஒரு சதுர செப்பு நாணயத்தின் ஒரு பகுதியை ஆற்றில் போடலாம். இது தொடர்பாக நல்ல ஜோதிடரை ஆலோசிக்கலாம்.
பொங்கல் பண்டிகை அன்று தானம் செய்வதால் நமக்கு வாழ்க்கையில் நினைத்த காரியம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி கிடைப்பதோடு, பொருளாதார மேம்பாடும் அடையும்.
இதையும் படிங்க: வீட்டில் விளக்கு ஏற்றும் போது இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!