இன்று பங்குனி அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் எது?
பங்குனி அமாவாசை மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் முன்னோர்களின் ஆசியை பெற முடியும் என்பது ஐதீகம்.
அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் ஒன்றாகும்.. அமாவாசை நாளில் விரதம் இருந்து வழிபட்டால் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று பங்குனி மாத அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. பங்குனி அமாவாசை மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் முன்னோர்களின் ஆசியை பெற முடியும் என்பது ஐதீகம்.
இந்த பங்குனி மாதத்தில் வரும் இந்த அமாவாசையில் விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அபூர்வமாக அமாவாசை தினமான இன்று சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. இன்று திங்கள்கிழமை என்பதால் இந்த அமாவாசை சோமாவர அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசை திதி ஏப்ரல் 05, அதிகாலை 2.54 முதல் ஏப்ரல் 9 அதிகாலை 12.58 வரை நீடிக்கிறது. அமாவாசை திதி நாள் முழுவதும் நீடித்தாலும், மதியம் நேரத்திற்குள் தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.
Panchangam : வாக்கிய vs திருக்கணித பஞ்சாங்கம்..? எது சிறந்தது..?
அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.முன்னோர்களை வழிபட்ட பின்னரே பூஜைகளை செய்ய வேண்டும். சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு மற்ற கேளிக்கைகளை தவிர்க்க வேண்டும். மேலும் பிரம்மாச்சாரிகள், சாதுக்கள், வைஷ்ணவர்கள், துறவிகள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கினால் யாகத்திற்கு இணையான பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும். அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்கலாம். கடனில் இருந்து விடுபடுவதற்கு அமாவாசை திதி சிறப்பானதாக கருதப்படுகிறது.
Guru Peyarchi 2024 : குபேர யோகம் அடிக்கப் போகுது.. இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..
எனவே இந்த நாளில் முடிந்தவரை அன்னதானம் செய்வதும், முன்னோர்களை வணங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும். மேலும் பித்ரு சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை நீங்கி வாழ்வில் சுபிக்ஷம் உண்டாகும் என்பது ஐதீகம். முன்னோர்களின் ஆசி கிடைத்தாலே நம் வாழ்வின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, செல்வம் என சகல நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.