Panchangam : வாக்கிய vs திருக்கணித பஞ்சாங்கம்..? எது சிறந்தது..?
இந்த பதிவில் வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன.. இவை இரண்டுக்கும் உள்ள என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
உங்களுக்கு தெரியுமா.. வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 6 மணி 48 நிமிடங்கள் வரை வேறுபாடுகள் உள்ளதாம். அதுவும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிக குறைவாகவும், அஷ்டமி, நவமி தினங்களில் அதிகமாகவும் இருக்கும். சரி வாங்க இப்போது, வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன.. இவை இரண்டுக்கும் உள்ள என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வாக்கிய பஞ்சாங்கம் : பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷிகள் அனைவரும் ஒன்றுக்கூடி தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை பரிமாறி, இயற்றிய ஸ்லோகங்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் இன்றளவும் எழுதப்படுவது தான் "வாக்கிய பஞ்சாங்கம்" ஆகும்.
இதையும் படிங்க: Today Rasi Palan 05th April 2024 : இன்றைய ராசிபலன்கள்.. இந்த ராசிகளுக்கு சிறப்பான நாள்!
வாக்கிய பஞ்சாங்கமானது, காலமாற்றத்தினால் எந்த விதமான மாற்றத்திற்கும் உட்படாத, அதாவது திருத்தப்படாத பஞ்சாங்கமாக இது வெளிவருகிறது. அதுமட்டுமின்றி, முன்னோர்களின் கருத்துக்களையும், அவர்கள் பின்பற்றிய கணிதமுறைகளை இன்றளவும் மாற்றாமல் பழமையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் பஞ்சாங்கம் எதுவென்றால், அது வாக்கிய பஞ்சாங்கமாகும். உங்களுக்கு தெரியுமா.. தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களில் இறைவழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப்படுகின்றது.
திருக்கணித பஞ்சாங்கம் : 18ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தொலைநோக்கி உதவியுடன், கிரக நிலைகள் மற்றும் சந்திரனின் சுழற்சி பாதையில் ஏற்படும் சிறு சிறு வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்பட்ட பஞ்சாங்கம் தான் "திருக்கணித பஞ்சாங்கம்" ஆகும்.
இதையும் படிங்க: Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஏப்ரல் 05, 2024, வெள்ளிக்கிழமை...
பொதுவாகவே, சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவு என்பதால், மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசைக்கு அது ஆட்படுவதால் சந்திரனின் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவது வழக்கம். மேலும் லஹரி அயனாம்சத்தை அடிப்படையாக கொண்டு பின்பற்றப்படுவது, கணிதமுறைகளில் சில மாற்றங்களை திருத்தப்பட்டு அதை வெளியிடப்படும் பஞ்சாங்கம் 'திருத்தப்பட்ட கணிதம்' அல்லது 'திருக்கணித பஞ்சாங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா..இந்த திருக்கணித பஞ்சாங்கத்தின் மூலமாக தான், பெரும்பாலான ஜோதிடர்களால் ஜாதகத்தை கணிக்கவும், ஜாதக பலன்களை சொல்லவும் பயன்படுத்தப்படுகின்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D