Today Rasi Palan: அக்டோபர் 09, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சுபமான நாளாக அமையும்.
நல்ல செய்திகள் உங்களை வந்து சேரலாம்.
உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
வேலை மற்றும் வியாபாரத்தில் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள்.
புதிய திட்டங்களில் தெளிவு கிடைக்கும். பொறுமையும் விடா முயற்சியும் முன்னேற்றத்திற்கு அவசியம்.
சுக்கிரப் பெயர்சி நடைபெற இருப்பதால் அதன் காரணமாக நீங்கள் சில நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பீர்கள்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை பொதுவாக சாதகமாக இருக்கும்.
புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம்.
பூர்வீக சொத்து தொடர்பான தீர்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சொத்துக்களை வருமானத்திற்கான ஆதாரமாக மாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய முதலீடுகள் குறித்து சிந்திப்பீர்கள்.
இருப்பினும் அவசர முடிவு எடுக்காமல் நிதானமாக சிந்திக்க வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும்.
காதல் உறவுகளில் நெருக்கம் காணப்படும்.
பழைய பிரச்சனைகள் தீர்ந்து, அன்பு வலுப்பெறும்.
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நாளை செலவழிப்பீர்கள்.
குடும்ப உறவுகள், ஆடம்பரம் அல்லது தனிப்பட்ட செலவுகள் காரணமாக எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம்.
எனவே சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டியது நல்லது.
வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும்.
பரிகாரங்கள்:
விஷ்ணு அல்லது குரு பகவானை வழிபடலாம்.
சுக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மகாலட்சுமி தாயாரை வழிபடலாம்.
உளுத்தம் பருப்பை கோவிலுக்கு தானம் செய்யலாம்.
வாழை மரத்தை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து தினமும் நீர் ஊற்றினால் குருவின் அருள் கிடைக்கும்.
ஏழைகளுக்கு உணவு தானம் செய்வது நன்மைகளைத் தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.