- Home
- Astrology
- Astrology: தீபாவளிக்கு முன் நடக்கும் குரு பெயர்ச்சி.! 3 ராசிகளின் வாழ்க்கையில் புயல் வீசப் போகுது.! ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.!
Astrology: தீபாவளிக்கு முன் நடக்கும் குரு பெயர்ச்சி.! 3 ராசிகளின் வாழ்க்கையில் புயல் வீசப் போகுது.! ரொம்ப கஷ்டப்படப் போறீங்க.!
Guru Peyarchi 2025: இந்த மாதம் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நன்மையை தந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை தரக்கூடும். அந்த ராசிகள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2025
வேத ஜோதிடத்தின் படி குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். ஆனால் இந்த ஆண்டு குறுகிய காலத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். அந்த வகையில் அக்டோபர் 18, 2025 அன்று மிதுன ராசியிலிருந்து வெளியேறி கடக ராசிக்குள் சஞ்சாரம் செய்கிறார். பின்னர் டிசம்பர் 5, 2025 அன்று வக்கிர நிலையை அடைந்து மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
குரு பகவானின் இந்த சஞ்சாரம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. பல ராசிக்காரர்களுக்கு இது நன்மையைத் தந்தாலும், சில ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ள கூடும் என கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- ரிஷப ராசிக்கு குருவின் சஞ்சாரம் மூன்றாவது வீட்டில் நிகழ இருக்கிறது.
- இதன் காரணமாக உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.
- உங்கள் நிதி நிலைமை மோசமடையலாம்.
- தேவையற்ற செலவுகள் காரணமாக மன அழுத்தங்கள் ஏற்படலாம்.
- ந்த காலகட்டத்தில் மன உளைச்சல்கள் அதிகரிக்கலாம்.
- குருவின் இந்த பெயர்ச்சியானது உங்கள் உடல் நலத்திலும் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
- அதிக சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணரலாம்.
- உங்களின் பேச்சுத் திறமை உங்களுக்கு எதிராகவே திரும்பலாம்.
- அதிகமாக பேசுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
- எனவே இந்த காலகட்டத்தில் சமூகத்திலும், குடும்பத்திலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
சிம்மம்
- குருவின் இந்த பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தவில்லை.
- சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த சோர்வாக உணர்வீர்கள்.
- வேலையிலும் மந்த நிலை ஏற்படலாம்.
- திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் போகலாம்.
- எந்த காரியத்தை எடுத்தாலும், அதில் தாமதம் ஏற்படலாம்.
- இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகள் மிக சுறுசுறுப்பாக இயங்குவார்கள். எனவே நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது.
- உங்கள் தனிப்பட்ட அல்லது ரகசியங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- நிதி சார்ந்த விஷயங்களில் அவசரம் காட்டாமல் பொறுமையாகவும், நிதானமாகவும் ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் ஆறாவது வீட்டில் நடைபெற இருக்கிறது.
- இந்த வீடு எதிரிகளையும், நோய்களையும் குறிக்கிறது.
- எனவே கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.
- வேலை அல்லது தொழிலில் போட்டியாளர்கள் எதிரிகள் அதிகரிக்கலாம்.
- வேலையில் இருக்கும் பணிச்சுமை உங்களை சோர்வடையச் செய்யலாம்.
- வெற்றியை அடைவதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
- உங்கள் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் தேவை.
- வெளியில் இருந்து வாங்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)