- Home
- Astrology
- Astrology: நிலையை மாற்றிய சூரிய பகவான்.! உருவாகும் ரவி யோகத்தால் கோடிகளில் புரளப் போகும் 6 ராசிகள்.!
Astrology: நிலையை மாற்றிய சூரிய பகவான்.! உருவாகும் ரவி யோகத்தால் கோடிகளில் புரளப் போகும் 6 ராசிகள்.!
Ravi Yog 2025: இந்த மாதம் சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து வெளியேறி துலாம் ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக உருவாகும் ரவி யோகம் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வாரி வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரவி யோகம் 2205
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் ஒரு மாதம் வரை தங்குகிறார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் பொழுது அவர் சில சுபயோகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில் அக்டோபர் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 01:53 மணிக்கு அவர் கன்னி ராசியில் இருந்து வெளியேறி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் நவம்பர் 16 வரை இருக்கும் அவர் பின்னர் விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
சூரிய பகவானின் இந்த ராசி மாற்றத்தின் பொழுது ரவியோகம் உண்டாகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
- மேஷ ராசியில் ஏழாவது வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார்.
- இதன் காரணமாக வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- தந்தை வழி மூலம் சொத்துக்கள் கிடைக்கலாம்.
- தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.
- வேலையில்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
- திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
- காதல் விவகாரங்களில் வெற்றியைப் பெறுவீர்கள்.
- பல வழிகளில் இருந்து பணம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். லாபம் இரட்டிப்பாகும்.
- இதன் காரணமாக கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மன மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்
- ரிஷப ராசியின் ஆறாவது வீட்டில் சூரியன் சஞ்சரிக்க இருக்கிறார்.
- ஜாதகத்தில் ஆறாவது வீடு என்பது தொழில், ஆரோக்கியம், கடன் எதிரிகள், கடமைகள் ஆகியவற்றை குறிக்கிறது.
- சூரியன் ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் நிதி தனிப்பட்ட மற்றும் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் முழுமையாக தீரும்.
- சொத்துத் தகராறுகள் தீர்ந்து, பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரலாம்.
- நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
- தந்தை தரப்பிலிருந்து சொத்துக்கள் கிடைக்கலாம்.
- புதிய வீடு அல்லது புதிய வாகனத்தை வாங்குவீர்கள்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
- இதன் காரணமாக புதிய பொறுப்புகள் அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம்.
- வணிகத்தில் உங்கள் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறிச் செல்வீர்கள்.
மிதுனம்
- மிதுன ராசியில் ஐந்தாவது வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார்.
- ஜாதகத்தில் ஐந்தாவது வீடு என்பது குழந்தைகள், காதல், படைப்பாற்றல், மகிழ்ச்சி, கலை, பொழுதுபோக்கு, அதிஷ்டம், புண்ணியம் ஆகியவற்றை குறிக்கிறது.
- எனவே மிதுன ராசிக்காரர்கள் இந்த காலத்தில் காதல் மற்றும் திருமண முயற்சிகளில் பெரிய வெற்றியை பெறுவீர்கள்.
- மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் வெற்றியை ஈட்டுவீர்கள்.
- குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
- குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
- நேர்காணல் முடித்து வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
- குடும்ப சண்டைகள் தீரும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும்.
கடகம்
- சூரியனின் இந்த பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்ற இருக்கிறது.
- இதுவரை கிடைக்காத புதிய அதிகாரத்தை பெற இருக்கிறீர்கள்.
- பணியிடத்தில் புதிய யோசனைகளை செயல்படுத்தி மற்றவர்களை காட்டிலும் முன்னேறி செல்வீர்கள்.
- இதன் காரணமாக உங்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கலாம்.
- வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
- குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
- கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிறு சிறு பூசல்கள் தீர்ந்து நெருக்கம் அதிகமாகும்.
- சொத்துப் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
- தொழில்முறை மற்றும் வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய இடத்தில் வேலையைப் பெறுவீர்கள்.
தனுசு
- தனுசு ராசியின் 11வது வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார்.
- ஜாதகத்தில் பதினோராவது வீடு ‘லாப ஸ்தானம்’ என்று அறியப்படுகிறது.
- எனவே தனுசு ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு வழிகளில் இருந்து பணம் வரவை எதிர்பார்க்கலாம்.
- தொழிலில் நீங்கள் எதிர்பாராத லாபத்தை ஈட்டலாம்.
- இதன் காரணமாக நீங்கள் ஆடம்பரப் பொருட்கள் அல்லது புதிய சொத்துக்களை வாங்கிக் குவிப்பீர்கள்.
- புதிய வீடு, புதிய வாகனம், வீடு கட்டுவதற்கு மனை ஆகியவற்றை வாங்கும் வாய்ப்புகளும் உண்டு.
- நிலுவையில் இருந்த பழைய கடன்களை அடைத்து, மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் உங்கள் வாரிசுகளின் கைகளுக்கு வந்து சேரும்.
மகரம்
- மகர ராசியின் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார்.
- ஜாதகத்தில் பத்தாவது வீடு என்பது ‘கர்ம ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது.
- இது வேலை, தொழில், சமூக அந்தஸ்து மற்றும் சாதனைகளை குறிக்கிறது.
- சூரிய பகவானின் இந்த சஞ்சாரத்தால் மகர ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் மிகப்பெரிய பலன்களை அடைய இருக்கிறீர்கள்.
- சிறிதாக தொழில் செய்து வருபவர்கள் அதை பெரிதாக விரிவாக்கம் செய்யவோ அல்லது வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகளோ கிடைக்கலாம்.
- நீங்கள் தொழில் ரீதியாக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பலன் தரும்.
- வருமானத்தை அதிகரிக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைப் பெறும். கு
- றைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்கள், கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலைக்குச் செல்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)